Preloader images
Preloader icon

குலுக்கல் முறையிலான வெற்றியாளர் தெரிவு போட்டிக்கு பின்வரும் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பொருத்தமானதாக அமைந்திருக்கும். எனவே, நீங்கள் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தெரிவில் ஈடுபடும் முன்னர் அவற்றை நன்கு வாசித்து, புரிந்து கொள்வது என்பது முக்கியமானதாகும்.
இந்த குலுக்கல் முறையிலான வெற்றியாளர் தெரிவு போட்டியில் பிரவேசிப்பதனூடாக, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயலாற்ற நீங்கள் இத்தால் உறுதியளிக்கின்றீர்கள்.

  1. 2021 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2021 மார்ச் 31ஆம் திகதி வரை குலுக்கல் முறையிலான வெற்றியாளர் தெரிவுக்கான காலம் செல்லுபடியாகும்
  2. மாதாந்தம் 15,000/-, காலாண்டு 45,000/-, அரையாண்டு 75,000/- மற்றும் வருடாந்தம் 150,000/- என்பதற்கு மேற்பட்ட புதிய காப்புறுதிப் பத்திரங்களைக் கொண்ட காப்புறுதிதாரர்கள் இந்த குலுக்கல் முறையிலான வெற்றியாளர் தெரிவுக்கு தகைமை பெறுவார்கள்
  3. ஒன்றுக்கு மேற்பட்ட தகைமைகளைப் பெற வாடிக்கையாளர்/காப்புறுதிதாரர் ஏற்புடையவர்களாக இருப்பதுடன், வருடாந்த அடிப்படையிலான தவணைக்கட்டணமாக (ANBP) செலுத்தும் ஒவ்வொரு 100,000 ரூபாய்க்கும் ஒரு அனுமதி வீதம் தகைமையை பெறுவர்.
  4. ஒரு வாடிக்கையாளர் ஒன்றுக்கு மேற்பட்ட காப்புறுதிப் பத்திரங்களினூடாக ஒன்றுக்கு மேற்பட்ட அனுமதிகளைப் பெற்றிருந்த போதிலும், வெற்றியீட்டுவதற்கு ஒரு வாய்ப்பை மாத்திரமே கொண்டிருப்பதுடன், ஒரு பரிசையும் பெற்றுக்கொள்ள முடியும். (கீழ் தரப்பட்ட அட்டவணையை பார்வையிடவும்**)
  5. சகல காப்புறுதிகளும் குலுக்கல் முறையிலான வெற்றியாளர் தெரிவு போட்டி காலப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
  6. ஒற்றை தவணைக்கட்டணம் மற்றும் DTA காப்புறுதிகள் இந்தத் திட்டத்துக்கு தகைமை பெறமாட்டாது.
  7. குலுக்கல் முறையிலான வெற்றியாளர் தெரிவு 2021 ஏப்ரல் 3ஆவது வாரத்தில் இடம்பெறும் என்பதுடன், வெற்றியாளர்கள் பத்திரிகை விளம்பரங்களினூடாக அறிவிக்கப்படுவார்கள்.
  8. குலுக்கல் முறையிலான வெற்றியாளர் தெரிவு இடம்பெறும் போது, எவ்விதமான தவணைக் கட்டண நிலுவைகளும் காணப்படக்கூடாது என்பதுடன், சகல காப்புறுதிப் பத்திரங்களும் செயலில் இருக்க வேண்டும்.
  9. யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்கள் (விற்பனை ஊழியர்கள் உட்பட) மற்றும் உடனடி குடும்ப உறுப்பினர்கள் இந்த வெற்றிச் சீட்டெழுப்பில் பங்கேற்க தகுதி பெற மாட்டார்கள்.
  10. வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசுகளை பணமாக மாற்றிக் கொள்ள முடியாது.

வருடாந்த அடிப்படையிலான தவணைக்கட்டணம் (ANBP) என்பது 1 வருட காலப்பகுதிக்கு (மாதாந்தம் = 12, காலாண்டு = 4, அரையாண்டு = 2, வருடாந்தம் = 1) எனும் முறையில் செலுத்தப்படும் தொகையைக் குறிப்பதுடன், கணிப்பீட்டுக்காக அருகாமையில் வரும் 100,000 ரூபாய்க்கு அண்ணளவாக்கப்படும்.

** Gifts table

  Prize No of winners
1st Place iPhone 12 ProMax – 512GB1
2nd Place iPad Air 2020 (Cellular & WiFi) + Apple Pencil 2nd Gen + Keyboard1
3rd Place SAMSUNG Smart TV 55″1
4th Place10th PlaceASUS UX363 Laptops7
11th Place20th PlaceSAMSUNG Smart TV 43″ (Full HD)10
21th Place30th PlaceSamsung A30 phones10
31st Place50th PlaceMobitel Wifi router + free connection for 1 year (50GB per month)20