Preloader images
Preloader icon
  1. யூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ் என்பது, பல பாரம்பரிய காப்புறுதித் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவு முதலீட்டு அனுகூலங்களை வழங்கக்கூடிய திட்டமாக அமைந்துள்ளது. அத்துடன் தங்கியிருக்கக்கூடிய ஆயுள் காப்பீட்டையும் வழங்குகிறது. ஆயுள் காப்புறுதியுடன், தங்கியிருக்கக்கூடிய மற்றும் நம்பகமாக திட்டத்தில் முதலிட விரும்புவோருக்கு இந்த திட்டம் சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. யூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ் திட்டத்துக்கு ஒரு தவணைக் கொடுப்பனவு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள நிலையில், முதலீட்டாளர், முதலீட்டை மேற்கொள்ளும் காலப்பகுதியை 5 முதல் 30 வருடங்கள வரையான காலப்பகுதியினுள் நிர்ணயித்துக் கொள்ள முடியும். காப்புறுதிதாரர் சார்பாக நிறுவனம் பிரிதொரு முதலீட்டுக் கணக்கொன்றை நிர்வகிக்கும், இதில் வருடாந்த பங்கிலாபங்கள் நேரடியாக வைப்புச் செய்யப்படும். இந்த திட்டத்தின் விசேட அம்சம் யாதெனில் ஆயுள் காப்புறுதியுடன், ஆரம்ப ஒற்றைத் தவணக்கட்டணத்தின் 105% உத்தரவாதமளிக்கப்பட்ட தொகை வழங்கப்படுவது அமைந்துள்ளது.

    வருடாந்த பங்கிலாப சதவீதம் மற்றும் முன்னேற்றம்

    ஆண்டு
    சராசரி சந்தை வட்டி வீதம் *
    ஆண்டுக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட ஆகக்குறைந்த பங்கிலாப வீதம் **
    வழங்கப்பட்ட பங்கிலாப வீதம் **
    2008 10.80 12.0 13.0
    2009 10.61 11.5 13.5
    2010 6.89 11.5 14.5
    2011 6.40 11.5 11.5
    2012 8.67 8.0 11.5
    2013 10.23 9.5 11.75
    2014 6.69 8.0 11.5
    2015 5.99 8.0 9.5
    2016 7.1 8.0 10.5
    2017 9.01 10 10.25
    2018 8.85 10 10
    2019 8.20 10 10
    2020 5.80 9 9
    2021 4.98 8 8
    *குறித்த ஆண்டுக்கான வணிக வங்கிகளுக்கான சராசரி வைப்பு பெறுமதி அடிப்படையில் இது கணிப்பீடு செய்யப்படுகிறது (மூலம்: மத்திய வங்கி) ** யூனியன் அஷ்யூரன்ஸ் மூலம் யூனியன் அஷ்யூரன்ஸின் ஆயுள் நிதியத்தின் நேர்த்தியாக கொள்கைகள் மூலமாக, 2007 ஆம் ஆண்டு முதல் காப்புறுதிதாரர்களுக்கு உயர் பங்கிலாபங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
    மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும். குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.