Preloader images
Preloader icon

இந்தப் பண்டிகைக் காலத்தில், உங்கள் நம்பிக்கையை வென்ற காப்புறுதிப் பங்காளரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, டிசம்பர் 10ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள், One Galle Face (OGF) இன் கீழ் மாடியில் அமைந்துள்ள விற்பனைகூடத்துக்கு விஜயம் செய்வோருக்கு இலவச சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுகாதார பரிசோதனைகளில் இருதய வயது கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, அதனூடாக இருதயக் கோளாறு அல்லது பக்க வாதம் ஏற்படுவதற்கான இடர் தொடர்பில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும், டிசம்பர் 22ஆம் திகதி யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமத் தூதுவர்களான பாதியா மற்றும் சந்துஷ் ஆகியோருடன் இணையலாம். இந்த கூடத்துக்கு விஜயம் செய்வோருக்கு, இந்த இசை நட்சத்திரங்களை சந்தித்து நிழல்படம் எடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

வாடிக்கையாளர்களின் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை இனங்கண்டு யூனியன் அஷ்யூரன்ஸின் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி காப்புறுதி ஆலோசகர்களால் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும், HEALTH 360 தீர்வுடன், நுகர்வோருக்கு தமது அன்புக்குரியவர்களுக்காக சிறந்த சிகிச்சையை பெற்றுக் கொள்ளக் கூடிய சுதந்திரம் வழங்கப்படுகின்றது. HEALTH 360 இனால் நுகர்வோருக்கு ஒரே தீர்வின் கீழ் முழுக் குடும்பத்துக்குமான சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய பரிபூரண காப்பீடு வைத்தியசாலை கட்டணங்கள், சத்திர சிகிச்சை, மருத்துவம், குழந்தைப் பேறு சேவைகள், பல் மற்றும் மூக்குக் கண்ணாடிசார் சேவைகள் போன்றவற்றுக்கு வழங்கப்படுகின்றன. சுகாதார இணைந்த காப்பீட்டுக்காக அதியுயர் வயதெல்லையான 75 வருடங்கள் வரை வருடாந்தம் 60 மில்லியன் ரூபாய் வரையான காப்பீட்டுத் தொகையை வழங்குகின்றது. மேலதிக தகவல், மற்றும் HEALTH 360 காப்புறுதி பற்றிய விடயங்களை OGF இல் அமைந்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் விற்பனை கூடத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் அவை மாற்றியமைக்கப்படுவதை கம்பனியின் காப்புறுதி ஆலோசகர்கள் உறுதி செய்வார்கள்.

உறுதியான பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், முதலீடு மற்றும் ஓய்வூதிய காப்புறுதிப் பிரிவுகளினூடாக தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை எய்துவதற்கான அர்ப்பணிப்பை யூனியன் அஷ்யூரன்ஸ் எப்போதும் உறுதி செய்துள்ளது.

புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருக்கும் வகையில், இந்த காட்சிகூடத்தில் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான உள்ளம்சங்கள் இணைக்கப்பட்டு, விஜயம் செய்வோருக்கு சகல சுகாதார அறிக்கைகள் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக பெற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுகள் பற்றிய விளக்கங்கள் போன்றன வழங்கப்படுகின்றன. எமது சகல காப்புறுதி ஆலோசகர்களும் சிறந்த தீர்வு மற்றும் சேவை அனுபவத்தை வழங்க தயாராகவுள்ளனர்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.6 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 45.3 பில்லியனையும், 2021 ஜுன் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 300% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.