Preloader images
Preloader icon

இந்த ஆபத்து நிறைந்த காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் இலவச கொவிட்-19 ஆயுள் காப்புறுதியை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. இந்த இலவச காப்பீடு ஏற்கனவே காணப்படும் காப்புறுதிதரர்களுக்கும் ,புதிய காப்புறுதிதரர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த ஆயுள் காப்பீட்டின் பெறுமதி ஆகக்கூடியது 1 மில்லியன் ரூபாய் வரை அமைந்திருக்கும்

இலங்கையில் கொவிட்-19 பரவ ஆரம்பித்தவுடன் தனிமைப்படுத்தல் சிகிச்சைகளுக்கு வைத்தியசாலை பண அனுகூலத்தை அறிவித்த முதலாவது ஆயுள் காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. சமூகத்தின் புதிய வழமையான நிலையில் உறுதியற்ற நிலைகள் மற்றும் சவால்களுக்கு காப்புறுதிதாரருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் முகங்கொடுப்பதை உறுதி செய்ய யூனியன் அஷ்யூரன்ஸ் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றது.

“ஆயுள் விநியோக பிரிவின் பொது முகாமையாளர் செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், ”கொவிட்-19 பரவல் என்பது உலகளாவிய ரீதியில் காணப்படும் சுகாதார, பொருளாதார மற்றும் சமூக அவசரகால நிலையாகும். உலகளாவிய ரீதியில் மக்கள் பாரிய சுகாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதுடன், பொருளாதார சிக்கல்களுக்கும் முகங்கொடுத்துள்ளனர்.
இலங்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சகல பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் மத்தியில் ஒரு உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தற்போதைய நிலைவரத்தை
கவனத்தில் கொண்டு, பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், எமது காப்புறுதிதாரர்களுக்கு மேலதிக காப்பீட்டை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையை நாம்
முன்னெடுத்துள்ளோம். இதனூடாக, காப்புறுதிதாரர்களுக்கு இந்த நெருக்கடியான சூழலில் தமது குடும்பத்தாரின் நிதி நிலையை உறுதி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த காப்புறுதி எமது ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுவதால், சகல இலங்கையர்களுக்கும் இதைப் பெற்று தமது குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பாக பேணிக் கொள்ள முடியும்.” என்றார்.”

புதிய கொவிட்-19 காப்பீடு தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு எமது 24 மணி நேர அழைப்பு நிலையத்துடன் 1330 ஊடாக தொடர்பு கொள்ளவும். அல்லது info@unionassurance.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி அல்லது நிறுவனத்தின் இணையத்தளமான www.unionassurance.com ஊடாக chat செய்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.