நீரிழிவு என்பது பாரதூரமான நோய் நிலையாக கருதப்படுவதுடன், யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டது. யூனியன் மனிதாபிமானம் ஊடாக, இடையீடுகள் வடிவமைக்கப்பட்டு, இனங்காணல் மாதிரிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தன.
கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம், பிராந்திய சுகாதார அமைச்சு அலுவலகங்கள் மற்றும் தொற்றா நோய்கள் ஒழிப்பு பிரிவுகள் போன்றவற்றுடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Program Name | 2017 | 2018 | 2019 | |||
---|---|---|---|---|---|---|
No of Programs | No of Life Touched | No of Programs | No of Life Touched | No of Programs | No of Life Touched | |
Diabetes Awareness & Blood Screening programs | 47 | 3297 | 67 | 3497 | – | – |
One Spoon Special Project | – | – | – | – | 17 | 1445 |
நாடளாவிய ரீதியில் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம்
நீரிழிவு அமைதியான உயிர் கொல்லியாக இனங்காணப்படக்கூடியது. உலகளாவிய ரீதியில் பெருமளவு உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. உள்நாட்டு புள்ளி விவரங்களும் இதையே வெளிப்படுத்துகின்றன. தவிர்ப்பு பொறிமுறைகளை முன்னெடுத்தல், பராமரிப்பை மேம்படுத்தல், விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் கவனிப்பை மேம்படுத்தல் போன்றன இலங்கையில் நீரிழிவை கட்டுப்படுத்துவதில் பெருமளவு வினைத்திறன் வாய்ந்த நடவடிக்கையாக அமைந்துள்ளன. இதன் காரணமாக யூனியன் மனிதாபிமானம் ஊடாக நாடு முழுவதிலும் நீரிழிவு விழிப்புணர்வு தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. சுகாதார அமைச்சு அலுவலகங்கள் மற்றும் தொற்றா நோய் தவிர்ப்பு அலகுகள் போன்றவற்றுடன் கைகோர்த்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன
நாடளாவிய ரீதியிலான விழிப்புணர்வு திட்டம் 2018 ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆரம்பமாகியிருந்தன. இந்த திட்டத்தினூடாக 71 இலவச முன் பரிசோதனை அமர்வுகள் நாட்டின் 71 பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நோயாளிக்கும் இலவச குருதி பரிசோதனை, குருதி அழுத்த பரிசோதனை மற்றும் BMI பரிசோதனை மற்றும் தகைமை வாய்ந்த மருத்துவர்களிடமிருந்தான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன. நீரிழிவு விழிப்புணர்வு செயற்திட்டத்தினூடாக மொத்தமாக 2700 நபர்களை சென்றடைய முடிந்ததுடன், 891 நோயாளர்களை இனங்காண முடிந்திருந்தது. இவர்களுக்கு நீரிழிவை கட்டுப்படுத்திக் கொள்வது தொடர்பான முக்கியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.