டெங்கு பரவல் என்பது அதிகரித்திருந்தது. நாடு முழுவதிலும் இது மாபெரும் சுகாதார பிரச்சினையாக தோற்றம் பெற்றிருந்தது. இது தொடர்பில், யூனியன் மனிதாபிமானம் பிராந்திய சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் ஆகியவற்றுடன் கைகோர்த்து டெங்கு விழிப்புணர்வு திட்டங்களை ஏற்பாடு செயற்திருந்தது.
விழிப்புணர்வு திட்டங்களுக்கு மேலதிகமாக, பாடசாலைகளுடன் இணைந்து விசேட திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவற்றினூடாக, மாணவர்கள் மூலமாக சமூகத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Program Name | 2017 | 2018 | 2019 | |||
---|---|---|---|---|---|---|
No of Programs | No of Life Touched | No of Programs | No of Life Touched | No of Programs | No of Life Touched | |
Dengue – House to House Visit | 12 | 2110 Houses | 1 | 70 Houses | – | – |
Campaign Shramadana | 1 | – | 12 | 17,000 Students | 2 | 3300 |
Leaflet Distribution | 39 | – | – | – | – | – |
யூனியன் மனிதாபிமானம் ஊடான டெங்கு முன்னோடித் திட்டம்
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது டெங்கு ஒழிப்புத் திட்டம் கிருலப்பனை, சித்தார்த்தபுர வீடமைப்பு திட்டத்தில் 2017 ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2018 ஜனவரி 20 ஆம் திகதி பூர்த்தியடைந்திருந்தது. இந்த திட்டம் ஜுன் மாதம் பூர்த்தியடைந்ததுடன், டெங்கு ஒழிப்பு தொடர்பான முக்கியமான கருத்துக்களை வழங்கியிருந்தது
சிறுவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட திட்டமொன்று சமூகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.