oDoc உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்து காப்புறுதிதாரர்களுக்கு சுகாதார பராமரிப்பு சேவைகளை பெறுவதற்கு இலவசமாக அணுகும் வசதியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனாவைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதையும் சேர்ந்த காப்புறுதிதாரர்களுக்கு சுகாதார பராமரிப்பு சேவைகளை பெறுவதற்கு இலவசமாக அணுகும் வசதியை பெற்றுக் கொடுக்க oDoc உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்துள்ளது. உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுப் பரவல் வியாபித்துக் காணப்படும் நிலையில், எந்தவொரு நபருக்கும் தொற்று இன்மை உறுதி செய்யப்படும் வரையில், எவரும் பாதுகாப்பாக இருப்பதாக கருதிவிட முடியாது. வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முடக்கநிலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் பிறப்பிக்கப்பட்டு, நடமாட்டங்கள் கட்டுப்படுத்தும்