Preloader images
Preloader icon

வங்கி, நிதியியல் சேவைகள் மற்றும் காப்புறுதித் துறையில் பணியாற்றுவதற்கு சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு

இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது. வங்கி, நிதியியல் சேவைகள் மற்றும் காப்புறுதித் துறையைச் சேர்ந்த பணியாற்றுவதற்கு சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. நிறுவனத்தினால் பணிச் சூழல் மற்றும் ஊழியர்களுக்கு வலுவூட்டுவது தொடர்பில் காண்பிக்கப்படும் உறுதியான அர்ப்பணிப்பு Great Place to Work (GPTW) அமைப்பினால் வழங்கப்பட்டுள்ள இந்த கௌரவிப்பினூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. GPTW அமைப்பினால் இந்தப் பிரிவின் கீழ் நிறுவனங்களை கௌரவித்திருந்த முதல் தடவையாக

2021 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் ஒப்பற்ற வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது

யூனியன் அஷ்யூரன்ஸ் 2021 ஆம் ஆண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்ததனூடாக, இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது. சில முக்கியமான பிரிவுகளில் ஒப்பற்ற வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்திருந்தது. சிறந்த 5 துறைசார் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதியுயர் வழமையான புதிய வியாபார வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்திருந்ததுடன், துறையின் சராசரியான 29% உடன் ஒப்பிடுகையில் 42% வளர்ச்சியை எய்தியிருந்தது. ஒட்டுமொத்த தொழிற்துறையில் இரண்டாவது மாபெரும்

உயர் தொழில்நுட்ப நடவடிக்கைகளினூடாக யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னேற்றம்

தொடர்ச்சியான உயர் தொழில்நுட்ப நடவடிக்கைகளினூடாக, யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதித் துறையில் முன்னிலையில் திகழ்கின்றது. நாட்டின் காப்புறுதித் துறைக்கு பின்தொடர்வதற்கான மட்டக்குறியீடாக அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றுக்கிடையே ஒன்றிணைந்த செயற்பாட்டின் அடிப்படையில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், சிறந்த தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுடனும், வளர்ந்து வரும் ஆரம்பநிலை நிறுவனங்களுடனும் கைகோர்த்து, தமது டிஜிட்டல் ஆற்றல்களை மேம்படுத்த முடிந்துள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் அரையாண்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு கௌரவிப்பு

யூனியன் அஷ்யூரன்ஸ், தனது சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், 2021 அரையாண்டு விருதுகள் வழங்கும் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முகவர் செயலணி, பாங்கசூரன்ஸ் மற்றும் கூட்டாண்மை விற்பனை பிரிவுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்து விருதுகளை வெற்றியீட்டியருந்தவர்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். “2021 ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்திருந்த நிலையில், அவர்களின் சாதனைகள்

உயர்ந்த மற்றும் சிறந்த வெகுமதிகளுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் Circle of Excellence மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இலங்கையின் காப்புறுதித் துறையில் சர்வாம்சங்களும் பொருந்திய பாங்கசூரன்ஸ் வெகுமதித் திட்டமாக அமைந்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் Circle of Excellence, உயர்ந்த மற்றும் சிறந்த வெகுமதிகளுடன் மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றும் காப்புறுதி உறவு பேண் அதிகாரிகள் (IROs), பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் வலய முகாமையாளர்களுக்கு வெகுமதியளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இந்த மீள அறிமுகம் தொடர்பாக யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் காணப்படும் மாபெரும்

யூனியன் அஷ்யூரன்ஸ் 300 MDRT தகைமையாளர்களை பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது!

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, இலங்கையின் காப்புறுதி வரலாற்றில் இதுவரை பதிவாகியிருந்த ஆகக்கூடிய MDRT தகைமையாளர்கள் எண்ணிக்கையான 300 பேரை பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 74 சதவீத அதிகரிப்பாகும். சிறந்த ஐந்து (5) Top of the Table தகைமையாளர்கள், இருபது (20) Court of the Table தகைமையாளர்கள் மற்றும் இருநூற்று எழுபத்தைந்து

யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் ஸ்மார்ட் லைஃவ் உடன் குறுங்கால முதலீடு; நீண்ட கால பாதுகாப்பு மற்றும் அனுகூலங்கள்

யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் ஸ்மார்ட் லைஃவ் உடன் வாடிக்கையாளர்கள் தமது வெற்றிகரமான வாழ்க்கைக்காக முதலீடுகளை மேற்கொள்ள முடியும். ஸ்மார்ட் லைஃவ் இனால் 3, 5 அல்லது 7 வருடங்கள் எனும் குறுங் காலப்பகுதிக்கு கட்டுப் பணம் செலுத்தி, 40 வருடங்கள் வரை தொடர்ச்சியான பாதுகாப்பை அனுபவிக்க முடியும். ஸ்மார்ட் லைஃவ் இனால் உங்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பையும் முதலீட்டு இலக்குகளையும் குறுங் கால அடிப்படையிலான முதலீட்டுக் காலத்தில் எய்துவதற்கு உதவியாக அமைந்திருப்பதுடன், உங்களின் அன்புக்குரியவர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பையும்,

2ஆம் ஆண்டைாகவும் ஒன்றிணைந்த அறிக்கையிடல் சிறப்புக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு விருது வழங்கி கௌரவிப்பு

உங்கள் நம்பிக்கையை வென்ற ஆயுள் காப்புறுதிப் பங்காளரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, 2021ஆம் ஆண்டின் ஒன்றிணைந்த அறிக்கையிடலுக்கான CMA சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த 10 ஒன்றிணைந்த அறிக்கைகளைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுகளை வழங்கும் நிகழ்வை இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. சிறந்த நிதிப் பதிவுகளை பேணுவதுடன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒன்றிணைப்பு ஆகிய பெறுமதிகளின் மீதான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த கௌரவிப்பு மீளஉறுதி செய்திருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் “லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022” அறிமுகம்

பெருமளவு பரிசுகளுடன் விறுவிறுப்பான ஊக்குவிப்புத் திட்டம்! ஜோன் கீல்ஸ் கம்பனியின் துணை நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, லைஃவ்ஸ்டைல் போனஸ் 2022 திட்டத்தை பிரம்மாண்டமாக அறிமுகம் செய்துள்ளது. 2022 மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பெறுமதி வாய்ந்த ஸ்மார்ட் சாதனங்களை வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் தெரிவை கொண்டுள்ள இந்த ஊக்குவிப்புத் திட்டம் ஜனவரி 1ஆம் திகதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2022 மார்ச் மாதம்

வருடாந்த நிதி அறிக்கையிடல் சிறப்புக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு கௌரவிப்பு

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 56 ஆவது வருடாந்த நிதி அறிக்கைகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்றுள்ளது. காப்புறுதிப் பிரிவில் வருடாந்த நிதி அறிக்கையிடலுக்கான வெள்ளி விருதை நிறுவனம் சுவீகரித்திருந்தது. நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சிறந்த ஆளுகை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்றவற்றை ஊக்குவிக்கும் மீண்டெழும் மற்றும் காப்பு நடவடிக்கைகளுக்காக இந்த பெருமைக்குரிய கௌரவிப்பு