யூனியன் அஷ்யூரன்ஸ் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் விமரிசையாக இடம்பெற்றன
இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், கொழும்பிலுள்ள தலைமையகம் மற்றும் யாழ்ப்பாணக் கிளையில் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடியிருந்தது. பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கும் பல்கலாசார ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநராகத் திகழ்வதையிட்டு நிறுவனம் பெருமை கொள்கின்றது. நிறுவனத்தின் நிறைவேற்று நிர்வாகக் குழுவினர் மற்றும் ஊழியர்களின் பிரசன்னத்துடன் இந்த வைபவ நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தைப்பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் பாரம்பரிய அம்சங்கள் பல இந்நிகழ்வில் அடங்கியிருந்தன. யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம