Preloader images
Preloader icon

காப்பீட்டுத் தீர்வில் குழும மருத்துவ காப்பீடு சேர்ப்பு

கொழும்பு, 3 நவம்பர் 2021: இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான தனது பங்காண்மையை தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாகவும் புதுப்பித்துள்ளது. இதனூடாக இரு நிறுவனங்களுக்குமிடையிலான பரஸ்பர உறவு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான பங்காண்மையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதில் யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமை கொள்கின்றது. இதனூடாக, இலங்கையின் சட்டம் சார்ந்த நிபுணர்களுக்கு, துறையினால் வழங்கப்படும் பரிபூரண குழும மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வுகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எம்மை தொடர்ச்சியாக அர்ப்பணித்துள்ளதுடன், இந்த அர்ப்பணிப்பை இப்பங்காண்மை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.” என்றார்.

இந்தப் பங்காண்மையினூடாக, சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு, யூனியன் அஷ்யூரன்ஸின் ஆயுள் பாதுகாப்பு காப்புறுதித் திட்டத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், இதில் கொவிட்-19 வைத்தியசாலை அனுமதி, மருத்துவம், பிரசவம், சிகிச்சைகள் மற்றும் பற்சிகிச்சைகள் போன்றவற்றுக்கு பரிபூரண சுகாதார காப்பீடு வழங்கப்படுகின்றது. மேலும் பல பிரத்தியேகமான பங்காளர் அனுகூலங்களும் வழங்கப்படுகின்றன.

மேலும், இந்தப் பங்காண்மையினூடாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து விசேடத்துவம் வாய்ந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதில் முதலீடுகள், ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் கல்வித் திட்டங்கள் போன்றன அடங்கியுள்ளன. இதனூடாக முழுக் குடும்பத்தாரும் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 1974 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற மற்றும் அழுத்தம் கொடுக்கக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்த அமைப்பாக உள்ளது. கடந்த தசாப்த காலப்பகுதிகளில், சட்டம் சார்ந்த தொழிலுக்கு முன்னேற்றத்தையும், நலன்புரி செயற்பாடுகளையும் சம்மேளனம் வழங்கியுள்ளது.

இலங்கையின் பல்வேறு நிபுணத்துவ அமைப்புகளுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்து பங்காண்மைகளை கட்டியெழுப்பிய வண்ணமுள்ளது. இதில் பரந்தளவு தொழிற்துறைகளைச் சேர்ந்த அங்கத்தவர்கள் அடங்கியுள்ளனர். இதனூடாக, பெருமளவு மக்களுக்கு காப்புறுதியின் பெறுமதியை உணரச் செய்து, எப்போதும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையை போன்று காப்புறுதியை கொண்டிருப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் வாழ்க்கைக்கு, எமது பலம் எனும் தொனிப் பொருளின் கீழ், யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் தனது ஊழியர்கள், செயற்பாடுகள் மற்றும் தீர்வுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. அதனூடாக இலங்கையர்களின் வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பாதுகாப்பதை நோக்காகக் கொண்டுள்ளது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.6 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 45.3 பில்லியனையும், 2021 ஜுன் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 300% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது.