Preloader images
Preloader icon

வாடிக்கையாளர்கள் தங்கள் காப்புறுதிகளை தாமே நிர்வகிக்க அதிகாரம் அளிக்கும் காப்புறுதித் துறையின் முதலாவது விரிவான டிஜிட்டல் தீர்வான யூனியன் அஷ்யூரன்ஸின் Click life App, வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வழிவகுப்பதன் மூலம் ஒரு படி மேலே செல்கிறது. அற்புதமான fitness அம்சங்களுடன் வரும் இந்த புதுமையான App, வாடிக்கையாளர்கள் சேகரித்த loyalty புள்ளிகளின் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்புமிக்க வாழ்க்கைத்தர வெகுமதிகளையும் வழங்குகிறது.

ஆப்ஸின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் உடற்பயிற்சி இலக்குகளை நிறைவு செய்வதன் மூலம் கூடுதல் புள்ளிகளையும் அதன் மூலம் அதிக வெகுமதிகளையும் பெற முடியும். செயலியில் உள்ள ‘Get Fit’ வசதி, ஒருவரின் உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஒரு Dashboard மற்றும் தினசரி உணவு உட்கொள்ளலைக் கண்காணிக்க மற்றும் கலோரி பதிவு ஆகியவற்றை உள்ளடக்கியது. இது வாடிக்கையாளர்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் உதவும்.

அதிநவீன கலோரி கவுண்டரில் செயற்கை நுண்ணறிவால் இயங்ககூடிய உணவுப் படப் பிடிப்பு மற்றும் உணவுத்தேரிவுக்கான அங்கீகார அமைப்பும் உள்ளது, இது பயனர்கள் தங்கள் உணவின் படங்களை பார்வையிடவும், அவர்களின் கலோரி உட்கொள்ளலைக் கண்காணிக்கவும் உதவுகிறது. பல இலங்கை உணவுகள் உட்பட 900,000 உணவுப் பொருட்களின் தரவுத்தளத்தையும் இது கொண்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம், யூனியன் அஷ்யூரன்ஸ், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வெகுமதி அளிக்கும் வகையில் கலோரி எண்ணிக்கை மற்றும் உடல் செயற்பாட்டுக் கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதுமையான உடற்பயிற்சி தீர்வை அறிமுகப்படுத்தி இந்த தொழில்துறையில் முதன்மையானதாகத் திகழ்கிறது. மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் BMR (Basal Metabolic Rate) சூத்திரங்களில் ஒன்றான – Mifflin-St Jeor சமன்பாட்டின் அடிப்படையில் எடையைக் குறைக்க அல்லது பராமரிக்க பயனர்கள் ஒரு உடற்பயிற்சி திட்டத்தை உருவாக்கலாம் – இது தனிப்பயனாக்கப்பட்ட தினசரி கலோரி மற்றும் செயற்பாட்டு நிமிட இலக்கை வழங்குகிறது. அவர்களின் செயலியில் உள்ள நிமிடங்களைச் சரிபார்ப்பதன் மூலம், பயனர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பொருத்தமான குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் WHO பரிந்துரைகளின் அடிப்படையில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடியும். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 150 நிமிடங்களை உடற்பயிற்சி செயற்பாட்டில் வைத்திருப்பது அவர்கள் நீண்ட காலம் வாழவும், நன்றாக தூங்கவும், அவர்களின் நல்ல மனநிலையை அதிகரிக்கவும் உதவும்.

யூனியன் அஷ்யூரன்ஸின் தலைமை வங்கிக் காப்பீட்டு அதிகாரி விந்தியா குரே கூறுகையில், “பொறுப்பான காப்பீட்டாளராக இருப்பது என்பது ஒரு வர்த்தக நாமக்குறி கொள்கையை விட மிகவும் பெரிய விடயமாகும் . உடல் பருமனை சமாளிப்பது என்பது இலங்கையர்களுக்கு நீண்ட கால சுகாதார சவால்களில் ஒன்றாகும். WHO இன் கூற்றுப்படி, இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் அதிக எடையுடன் வாழ்கின்றனர், மேலும் இதய நோய், பக்கவாதம், புற்றுநோய், நீரிழிவு மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் போன்ற தொற்றா நோய்கள் நாட்டில் 80% க்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ ஊக்குவிப்பதற்காகவும், உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயிக்கவும் கிளிக்லைஃப் செயலியில் ஒரு புதிய விடயத்தை சேர்த்துள்ளோம்.
“நமது நாட்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று ஆரோக்கியமான வாழ்க்கையை அடைந்துகொள்ள மக்களுக்கு உதவி ஊக்குவிப்பது எனவும் அவர் மேலும் கூறினார்.”

முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வெகுமதிகாலை உள்ளடக்கிய , Click life App ஆனது உண்மையான தடையற்ற பண்பாட்டை வழங்குகிறது. செயலியின் உள்ளடக்கங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு Loyalty புள்ளிகளும் வழங்கப்படும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் வவுச்சர்கள் மூலம் பெற்றுக்கொண்ட புள்ளிகளைச் சேகரித்து பயன்படுத்தலாம். இந்த டிஜிட்டல் வவுச்சர்களை பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் துணிக்கடைகள் உட்பட
85க்கும் மேற்பட்ட கூட்டாளர் வணிக நிலையங்களில் பயன்படுத்த முடியும்.

யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம தகவல் அதிகாரி ஹர்ஷ சேனாநாயக்க, “யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையின் ஆயுள் காப்புறுதி துறையில் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதிலும், ஆரோக்கியமாக வாழ்வதிலும் இலகுபடுத்தப்பட்ட டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறது. டிஜிட்டல் மயமாக்கலின் சக்தி மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.

மேலும், “Clicklife App ஆனது ஆரோக்கியமாக இருப்பதற்கும் வெகுமதிகளைப் பெறுவதற்கும் புதிய வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது, மேலும் அவர்களின் காப்பீடுகளை நிகழ்நேரத்தில் நிர்வகிக்கவும் புதுப்பிக்கவும் அனுமதிக்கிறது.”

இலங்கையில் காப்புறுதித் துறையை சீர்செய்து கொள்வதற்காக யூனியன் அஷ்யூரன்ஸின் தொலைநோக்கு டிஜிட்டல் பாதையில் Click life App உம் ஒருங்கிணைந்ததாகும். இது அணுகுமுறை மற்றும் வசதியின் மூலம் ஆயுள் காப்பீட்டில் டிஜிட்டல் இடத்தை விரிவுபடுத்துகிறது. இந்த முன்னோடி முயற்சியானது வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை உறுதிபடுத்துகிறது.

சேவையின் சிறப்பை மேம்படுத்துவதற்கான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, நிறுவனத்தின் மூலோபாயத்தில் கிளிக்லைஃப் செயலி ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இது பாதுகாப்புத் தேவை இடைவெளியை நீக்குவதற்கும், நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் உதவும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற காப்புறுதி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும், மூன்று தசாப்த கால வெற்றியை நிறைவுசெய்து சந்தை மூலதனம் ரூ. 17.9 பில்லியன், ஆயுள் நிதி ரூ. 49.7 பில்லியன் மற்றும் முதலீட்டு மூலதனப் பங்களிப்பாக மார்ச் 2022 நிலவரப்படி ரூ. 58.5 பில்லியனாகவும் இருக்கிறது. இலங்கையர்களின் கனவுகளை மேம்படுத்தும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கையர்களின் கல்வி, சுகாதாரம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் தேவைகளை உள்ளடக்கிய ஆயுள் காப்பீட்டுத் தீர்வுகளை வழங்குகிறது. நாடு தழுவிய கிளை வலையமைப்பு மற்றும் 3,000-க்கும் அதிகமான பணியாளர்களுடன், யூனியன் அஷ்யூரன்ஸ், ஆயுள் காப்பீட்டுத் துறையில் உருவாகி வரும் மாற்றங்களுக்கு ஏற்ப தீர்வு வழங்கும் வகையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு மக்கள், நிறுவன உற்பத்திகள் மற்றும் செயல்முறைகளில் தொடர்ந்தும் முதலீடு செய்து வருகிறது.