Preloader images
Preloader icon

17 செப்டெம்பர் 2020, கொவிட்-19 தொற்றுப் பரவலுடன் எழுந்த சவால் நிலைக்கு முகங்கொடுத்திருந்தமை மற்றும் வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் ஆயுள் காப்புறுதி சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை போன்றவற்றுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தை, முன்னணி வியாபார சஞ்சிகையான ECHELON கௌரவித்திருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜுட் கோம்ஸ் அவர்களின் வழிகாட்டலில், சவால்களுக்கு முற்கூட்டியே நிறுவனம் ஆயத்தமாகியிருந்தது. புதிய வழமையினூடாக, யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு, அதன் தொனிப்பொருளான உங்கள் வாழ்க்கைக்கு எங்களது பலம் என்பதன் பிரகாரம் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிந்திருந்ததுடன், பொறுப்பு வாய்ந்த காப்புறுதி சேவை வழங்குநர் எனும் வகையில், பங்காளர்களுக்கு அவசியமான சேவைகளை பெற்றுக் கொடுத்திருந்தது.

 

காப்புறுதித் துறையில் 30 வருடகாலமாக ஈடுபடுவதுடன், தொழில்நுட்ப முன்னேற்றங்களை மேற்கொள்வதில் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னணியில் திகழ்கின்றது. இலங்கையில் 100% டிஜிட்டல், கடதாசி பாவனையற்ற செயன்முறைகளைப் பின்பற்றி காப்புறுதிகளை வழங்கும் முதலாவது ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன், துரிதமாக, நேரடியான கையாளல்கள், டிஜிட்டல் முறையினூடாக நஷ்டஈடு கோரல் சமர்ப்பிப்புகள் மற்றும் சேவைகளையும்; வழங்குகின்றது. 

 

நிறுவனம் அண்மையில் நவீனமயப்படுத்தப்பட்ட cloud அடிப்படையிலான 4G (நான்காம் தலைமுறை) காப்புறுதி கட்டமைப்பை பிராந்தியத்தில் முதன் முறையாக அறிமுகம் செய்திருந்தது. நிதிச் சேவைகள் துறையின் ஆலோசனை நிறுவனமும், சர்வதேச ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் நிறுவனமுமான Celent (a division of Oliver Wyman) இந்தக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு, யூனியன் அஷ்யூரன்சுக்கு “Model Insurer” கௌரவிப்பை அண்மையில் நியு யோர்க் நகரில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கியிருந்தது. 

 

டிஜிட்டல் மயப்படுத்தலினூடாக நிறுவனத்தின் தயார்நிலை என்பதன் காரணமாக, முகவர் செயலணியினருக்கு ஒன்லைன் ஊடாக பயிற்சிகளை பெற்றுக் கொடுக்க ஏதுவாக அமைந்திருந்ததுடன், புதிய வியாபாரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கல்களை டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக மேற்கொள்ளவும் ஏதுவாக அமைந்திருந்தது. முடக்கநிலை நிலவிய காலப்பகுதியில், ஒன்லைன் ஊடாக ஆட்சேர்ப்பு நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனூடாக, பலருக்கு புதிய பணியை பெற்றுக் கொள்ள முடிந்ததுடன், தமக்கு புதிய வருமான மூலத்தை தேடிக் கொள்ளவும் முடிந்தது. நாட்டில் முடக்க நிலை அறிவிக்கப்பட்ட மறுநாள் முதல் காப்புறுதிதாரர்களுக்கு இடைவிடாத சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில், வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 24/7 மணிநேரமும் மும்மொழிகளில் இயங்கும் அழைப்பு நிலையம், வெப் செட் வசதி, நஷ்டஈடு கோரல் ஆவணங்களையும், இதர சேவை தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிப்பதற்கான புத்தாக்கமான டிஜிட்டல் கட்டமைப்பு போன்றனவும் இதில் அடங்கியிருந்தன. இந்த சவால்கள் நிறைந்த உறுதியற்ற நிலையில், ஊழியர்களை வௌ;வேறு மட்டங்களில் ஈடுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினூடாக, STEP (Strive Towards Excellence Programme) அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக தொழில்நிலை துரிதப்படுத்தலுக்கு வழிகோலப்பட்டதுடன், கூட்டாண்மை நிர்வாகத்துடன் தொடர்புகளை பேணவும் வாய்ப்பளித்திருந்தது. 

தனது புரட்சிகரமான பயணத்தை வெளிப்படுத்தி, யூனியன் அஷ்யூரன்ஸ் தனது புதிய அடையாளத்தையும், தொனிப்பொருளையும் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்து, ஆயுள் காப்புறுதியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருந்தது. வளர்ந்து வரும் நுகர்வோர் தமது மீளமைக்கும் மூலோபாயத்தில் உள்வாங்கி, இலங்கையர்களின் கனவுகளை பாதுகாக்கும் நம்பிக்கையை வென்ற காப்புறுதியாளராக யூனியன் அஷ்யூரன்ஸ் பார்க்கப்படுகின்றது. மக்களுக்கு முறையாக திட்டமிட்டால் அதிகளவு கனவு காண முடியும் என்பதுடன், அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் உறுதியாக இருக்குமானால், உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடியதாக இருக்கும் என்பதுடன், மதிநுட்பமாக சிந்திப்பார்களானால் அவர்களின் வாழ்க்கை செழிப்பாக அமைந்திருக்கும்.

இலச்சினையினூடாக வாழ்க்கை வட்டம் என்பது உணர்த்தப்படுவதுடன், உங்கள் வாழ்க்கைக்கு எங்களது பலம் என்பது தொனிப்பொருளாக அமைந்துள்ளது. நிறுவனம் கட்டியெழுப்பியுள்ள உறுதியான நிதி அத்திவாரங்களினூடாக, நிறுவனத்தில் பணியாற்றும் நிபுணர்களின் மூலம் உறுதியான உறவுகளைக் கட்டியெழுப்பி;, புதிய விறுவிறுப்பான பயணத்தை தொடர்வது என்பதை புதிய அடையாளம் குறிக்கின்றது.