Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

கல்வி யூனியன் சிசுமக

யூனியன் சிசுமக

உங்கள் குழந்தைக்கு வழங்கக்கூடிய சிறந்த செல்வமாக கல்வி அமைந்துள்ளது. ஆனாலும், உங்கள் குழந்தையின் கல்விச் செயற்பாடுகளுக்கு உங்களுக்கு போதியளவு நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம் அல்லது உங்களின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து அவர்களால் அதனைத் தொடர முடியாத நிலை ஏற்படலாம். சரியான காப்புறுதி திட்டத்தின் மூலம், குழந்தையின் எதிர்காலத்துக்கு உறுதியான கல்வியை வழங்கக்கூடியதாக இருக்கும். அதன் மூலம் அவர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கையை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும். எனவே யூனியன் சிசுமகவில் உங்கள் நம்பிக்கையை வையுங்கள், உங்கள் குழந்தைக்கு சிறந்த பரிசை வழங்குங்கள்.

தடையில்லாத கல்வி

யூனியன் சிசுமக என்பது சேமிப்பு 10 காப்புறுதி திட்டமாகும், இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு 8 வருடங்களுக்கு வெவ்வேறு இடைவேளைகளில் பணக் கொடுப்பனவுகளை வழங்கும். எனவே, அவர்களின் கல்வியை தடையின்றி தொடரக்கூடியதாக இருக்கும். அவர்களின் கல்வி செலவீனங்கள் அதிகரிக்கும் நிலையில், ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் தொகையும் அதிகரிக்கும்.

யூனியன் சிசுமக எவ்வாறு செயற்படுகிறது

உங்கள் ஒரே தேவை என்பது நிலையான காலப்பகுதிக்கு தவணைக்கட்டணத்தை செலுத்த வேண்டியதாகும். இதை நீங்கள் தீர்மானிக்கலாம். கொடுப்பனவு காலப்பகுதி, காப்புறுதிதாரரின் வயது மற்றும் உங்கள் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டிய மொத்தத் தொகை ஆகியவற்றைப் பொறுத்து தவணைக்கட்டணம் தீர்மானிக்கப்படும். உங்களின் பிரத்தியேக தேவைகளைப் பொறுத்து கொடுப்பனவு காலம் மற்றும் மீளச் செலுத்தப்படும் தொகை ஆகியவற்றை தீர்மானித்துக் கொள்ளலாம்.

யூனியன் சிசுமக என்பது நீங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, உங்கள் குழந்தையின் கல்வியை தடையின்றி தொடர்வதற்கு உதவும் வகையிலமைந்த திட்டமாகும்.

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்.
குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.