Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

பாதுகாப்பு யூனியன் லோன் புரொடெக்டர்

யூனியன் லோன் புரொடெக்டர்

உங்களுக்கென வீடொன்றை வாங்கும், வாகனமொன்றை வாங்கும் நிலையை நீங்கள் எய்துவீர்கள். இதற்காக கடன் வசதியை பெற வேண்டியிருக்கும். ஆனாலும் எதிர்பாராத விதமாக இந்த கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் உங்களுக்கு பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும். சரியான காப்புறுதி ஒன்றின் மூலமாக இந்த சுமையை நீங்கள் தவிர்த்துக் கொள்ள முடியும். எனவே, யூனியன் அஷ்யூரன்ஸ் லோன் புரொடெக்டர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், உங்கள் கனவை நனவாக்குங்கள்.

யூனியன் லோன் புரொடெக்டர்

ஒற்றைத் தவணைக்கட்டணம்

இது காலம் குறைந்து செல்லும் காப்புறுதி திட்டமாகும், இதன் மூலமாக வீட்டுக்கடன், கட்டட கடன், வியாபார அல்லது பிரத்தியேகக் கடன் போன்றவற்றுக்கு காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். ஆரம்ப கட்டத்தில் காப்பீடு செய்யப்பட்ட தொகை என்பது பெற்றுக் கொண்ட கடன் தொகைக்கு நிகரானதாக அமைந்திருக்கும், பின்னர் கடன் தொகை செலுத்தப்படுவதற்கேற்ப குறைவடைந்து செல்லும்.

காலாவதி திகதிக்கு முன்னதாக காப்புறுதிதாரருக்கு மரணம் சம்பவிக்கும் நிலையில், நிலுவையிலுள்ள கடன் தொகையை நிறுவனம் குறித்த நிதி நிறுவனத்துக்கு செலுத்தும். (மீள் கொடுப்பனவுகள் நீண்ட கால நிலுவையில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளும்).

விபத்து அல்லது சுகயீனம் காரணமாக முழுமையான மற்றும் நிலையான அங்கவீனம் ஏற்படும் பட்சத்தில், ஆயுள் காப்புறுதிதாரர் சார்பாக நிறுவனம் நிலுவையிலுள்ள கடன் தொகையை நிதி நிறுவனத்துக்கு செலுத்தும் (மீள் கொடுப்பனவுகள் நீண்ட கால நிலுவையில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளும்)

பெருமளவான நிதி நிறுவனங்கள் இந்த காப்புறுதி திட்டத்தை கோருகின்றன, இதற்கு ஒரு தவணைக் கட்டணம் மட்டுமே அவசியமாகின்றது. கடன் தவணைக் கட்டணங்களை செலுத்தும் வேளையில், இந்த காப்புறுதி திட்டத்துக்கான கட்டணத்தை மாதாந்தம் வாடிக்கையாளர் செலுத்தத் தேவையில்லை. இந்த திட்டத்துக்கு முதிர்ச்சி அனுகூலம் எதுவும் வழங்கப்படாது.

பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்து தவணைக்கட்டண விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்:
  • கடன் வழங்கும் நிறுவனம்
  • கடன் தொகை
  • மீளச் செலுத்தும் காலம்
  • வட்டி வீதம்
  • பிரேரிப்பவரின் பிறந்த திகதி, பால் மற்றும் புகைபிடிப்பவரா இல்லையா

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்.
குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.