Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

எதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்

இலங்கையின் கூட்டாண்மை நிறுவனங்களின் மூலமாக டிஜிட்டல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முறைகள் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. யூனியன் அஷ்யூரன்ஸ் தனது செயற்பாடுகளில் டிஜிட்டல் முறைகளை மிகவும் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே பயன்படுத்தி வருவதுடன், இலங்கையில் இந்த முறையை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முறைகளை பிரத்தியேகமான முறையிலும் புத்தாக்கமான வகையிலும் பயன்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் டிஜிட்டல் பயணம் என்பது, இணையத்தளத்தையும் சமூக ஊடகங்களை பேணுவதிலும் மட்டுப்படுத்தப்படாமல் அமைந்துள்ளது. நிறுவனம் தனது வர்த்தக நாம உறுதி மொழியை சௌகர்யமான மற்றும் வெளிப்படையான காப்புறுதி எனும் வகையில் வழங்கியுள்ளது. இதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதுடன், ஆலோசகர்களை தமது நாளாந்த செயற்பாடுகளில் வலுவூட்டியுமுள்ளது.

இந்த டிஜிட்டல் புத்தாக்கங்கள் காரணமாக, ஆயுள் காப்புறுதியொன்றை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் நபர் ஒருவர் பாரம்பரிய கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதில்லை. இன்றைய காலகட்டத்தில் அவர்கள் செய்ய வேண்டியது, டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய முழுமையான பயிற்சிகளைப் பெற்ற ஆயுள் காப்புறுதி ஆலோசகர் ஒருவரை நாடுவதாகும். தற்போது, யூனியன் அஷ்யூரன்ஸ், தனது காப்புறுதி ஆலோசகர்களுக்கு டப்லெட் கணனிகளை வழங்கியுள்ளதுடன், தமது வாடிக்கையாளர்கள் சார்பாக இணையத்திலிருந்து தரவுகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவித்துள்ளது. உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவர், டிஜிட்டல் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள கட்டமைப்பினூடாக விலை மனுக்கோரல்களை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். இது நேரத்தை மீதப்படுத்துவதுடன், தமது வாடிக்கையாளர்களுக்கு சௌகர்யத்தை வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.

நேர்த்தியான, ஆர்வமுள்ள நபர்களை சேவையில் இணைத்துக் கொள்ளும் வகையில் வெவ்வேறான செயற்பாடுகளை கம்பனி முன்னெடுத்த வண்ணமுள்ளது. இதற்காக www.lifeplanner.lk எனும் இணையத்தளத்தையும் பேணி வருகிறது. மேலும், நபர்கள் இந்த முறை மூலமாக பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவதுடன், அவர்களுக்கு முழுமையான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், நிறுவனத்தின் பரந்த e-கற்றல் நூலகத்தை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. மேலும், காப்புறுதி மதிப்பிடல் போன்ற பிரதான செயற்பாடுகள் தற்போது டிஜிட்டல் கட்டமைப்பினூடாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பை பயன்படுத்தி வெற்றிகரமாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கொடுக்கல் வாங்கல்களை மேலும் சௌகர்யமானதாக்கும் வகையில், கம்பனியின் வாடிக்கையாளர் கட்டமைப்பு என்பது, தற்போது முழுமையாக இயங்கி வருவதுடன், பெருமளவான தற்போதைய வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தும் வருகிறது.

Facebook, Youtube மற்றும் Linkedin ஊடாக தமது வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான பிணைப்புகளை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, டிஜிட்டல் மயப்படுத்தல் சாத்தியமாகியுள்ளது. தமது வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான வகையில் எதிர்காலத்தில் சேவைகளை வழங்கக்கூடிய வகையில் நிறுவனம் பயணிப்பது உறுதியாகியுள்ளது. இந்த வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட செயற்பாடுகளினூடாக, கம்பனி வாடிக்கையாளர்களின் கேள்விகளை நிவர்த்தி செய்வதற்கு முடிந்துள்ளதுடன், அவர்களின் தேவைகளை முழுமையாக தீர்த்து வைக்கும் வகையில் செயலாற்றியுள்ளது.

டிஜிட்டல் சூழலில், கம்பனி தனது சாதனைகளை வெறுமனே நிலைநாட்டுவதுடன் நின்றுவிடாமல், 'நம்பிக்கை' எனும் தனது வர்த்தக நாம உறுதி மொழியை பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு புத்தாக்கமான வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கம்பனி திட்டமிட்டுள்ளது. தனது சகல பங்காளர்களுடனும் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களின் போது, வசதியான, வெளிப்படையான மற்றும் கௌரவத்துடனான பிணைப்புகளை பேண யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது.