Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

ACCA நிலைபேறாண்மை விருதுகள் 2018 இல் யூனியன் அஷ்யூரன்ஸ்க்கு கௌரவிப்பு

ACCA ஸ்ரீ லங்கா நிலைபேறாண்மை விருதுகள் 2018 இல், நிதிச் சேவைகள் மற்றும் காப்புறுதி பிரிவில் யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு 2019 மே 30 ஆம் திகதி இடம்பெற்றது.

ACCA விருதுகள் 2018 நிகழ்வில் சரக்கு கையாளல் மற்றும் கொள்முதல் உதவி பொது முகாமையாளர் மஹேஷ் ஜயசூரிய விருதை பெற்றுக் கொள்கின்றார்.

ACCA இனால் 15 ஆவது வருடமாக தொடர்ச்சியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், 11 ஆவது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் நிலைபேறான வியாபார செயற்பாடுகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாட்டுக்காக சகல பங்காளர்களுடனும் உறுதியான மற்றும் பெறுமதி வாய்ந்த உறவுகளை பேணுவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு தீர்வுகளை வழங்குவதுடன், அதற்காக உலகத் தரம் வாய்ந்த சேவைத் தரங்களை கொண்டுள்ளதுடன், ஊழியர் விருத்தியில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், நிபுணத்துவத்தையும் ஊக்குவித்து, வியாபார பங்காளர்களுடன் உறுதியான உறவுகளை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகின்றது. சமூகங்களின் நலனில் பங்களிப்பு வழங்குவதுடன், சூழலில் நிறுவனத்தின் தாக்கத்தை உறுதி செய்யும் வகையில் நிலைபேறான செயன்முறைகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதி செய்கின்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பெருமைக்குரிய விருதை பெற்றுக் கொள்வதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். தொடர்ந்தும் நிலைபேறான வியாபார செயன்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எமது அணியினருக்கு சிறந்த ஊக்குவிப்பாகவும் அமைந்திருந்தது.” என்றார்.

வாழ்க்கையை மாற்றியமைக்கும் பங்காண்மைகளை ஏற்படுத்துவதற்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளை மேம்படுத்துவதில் தனது முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.