Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

உயர் கல்வி பிரச்சாரத் திட்டத்துடன் நாடு முழுவதும் பயணிக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ்

மூன்று தசாப்த காலத்துக்கு அதிகமாக மக்களின் நம்பிக்கையை வென்ற ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் எனும் வகையில்,பரந்தளவு ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் வலிமை மற்றும் பாரம்பரியத்துடன் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கையர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் தேவைப்படும் நிதி தொடர்பான வழிகாட்டல்களை வழங்கி காப்புறுதியளித்துள்ளது.

HE1: பாடசாலை மாணவர்கள் விசேட VR அனுபவ அலகை பார்வையிடுகின்றனர்.
HE2: “நான் பெரியவரானதும்” ஓவிய போட்டியின் வெற்றியாளர்கள் தமது பரிசுகளை பெற்றுக் கொள்கின்றனர்.
HE3: பெற்றோர்களை இலக்காகக் கொண்டவிசேடநிகழ்ச்சி

உங்கள் பிள்ளைக்கு சிறந்த கல்வியை வழங்குவது மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வது என்பன எந்தவொரு பெற்றோரின் முக்கியமான பொறுப்புகளாக அமைந்துள்ளன. உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுவது என்பது சவால் நிறைந்த விடயமாக மாறிவரும் நிலையில்,பெருமளவான பெற்றோர்கள் தனியார் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைபெற்றுக் கொடுக்கதீர்மானிக்கின்றனர். இருந்த போதிலும்,பெற்றோருக்கு இந்த சவாலை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான நிதியை பெற்றுக் கொடுப்பது என்பது பெருமளவு சிக்கலான விடயமாக அமைந்துள்ளது. இந்த சவால்கள் நிலவிய போதிலும்,ஒவ்வொரு பெற்றோரும் தமது அர்ப்பணிப்பை சிறுவர்களின் எதிர்கால கல்வியை நனவாக்கிட தம்மை அர்ப்பணிக்கின்றனர்.

இதன் காரணமாக தமது பிள்ளைகளின் உயர் கல்வியை கவனத்தில் கொண்டு,பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமொன்றை கொண்டிருக்க எதிர்பார்க்கும் பெற்றோருக்கு உதவிகளைபெற்றுக் கொடுக்கும் நோக்கில் யூனியன் அஷ்யூரன்ஸ் இந்த திட்டத்தை முன்னெடுத்திருந்தது. யூனியன் அஷ்யூரன்ஸ் அணியினர் நாடளாவிய ரீதியில் பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சந்தித்து அவர்களின் கனவை நிறைவேற்றிக் கொள்ள வழிகாட்டும் வகையில் இந்த பயணத்தை முன்னெடுத்திருந்தது.

நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு திட்டமொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது. இந்த அனைத்து நிகழ்வுகளிலும் ஓவியப் போட்டி“நான் பெரியவரானதும்”எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு Virtual Reality அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய விசேட நிகழ்ச்சியும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பெற்றோர்களை இலக்காகக் கொண்ட விசேட விழிப்புணர்வு திட்டமொன்றும் விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட பிரத்தியேக நிதி ஆலோசகர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் உயர் கல்விகனவை நனவாக்கிக் கொள்வதற்கு நிதி ஆற்றல் படைத்தவர்களாக அவர்களை திகழச் செய்வதற்கு ஊக்குவிப்பதாக இந்ததிட்டம் அமைந்திருந்தது.

30 வருடகாலம் ஒப்பற்ற செயற்பாடுகளை நாட்டில் பின்பற்றிய தனியார் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. நிறுவனத்தின் செயற்பாடுகளை அனுபவம் மற்றும் திறன் வாய்ந்த நிபுணர்கள் முன்னெடுத்துவருவதுடன்,உறுதியான மூலதன இருப்பையும் மீள் காப்புறுதி பங்காண்மைகளையும் சர்வதேச மீள் காப்புறுதி நிறுவனங்களுடன் பேணிவருகிறது. “நம்பிக்கை” எனும் உறுதி மொழிக்கமைய யூனியன் அஷ்யூரன்ஸ் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன்,வெளிப்படையாகவும்,சௌகரியமாகவும் மதிப்பு வாய்ந்த வகையிலும் சகல பங்காளர்களுடன் தொடர்புகளைபேணுகிறது.