Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் அஷ்யூரன்ஸின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு 2018 தாய்லாந்தின்,பாங்கொக் நகரில் வெற்றிகரமாக நிறைவு

யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் வெளிநாடொன்றில் ஏற்பாடு செய்திருந்தது. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் 2018 ஆம் ஆண்டு நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றியிருந்த விற்பனை செயலணியினருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு 2019 ஏப்ரல் 02 ஆம் திகதி பாங்கொக்,பிரட்டுநம், த பேர்கிலி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நிகழ்வில் தாய்லாந்துக்கான இலங்கை தூதுவர் ஷெனுகாசெனிவிரட்ன மற்றும் யூனியன் அசூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி டர்க் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சம்பியன்களில் சம்பியன் விருதை பெற்றுக் கொண்ட பின்னர் கெளும் ஜயசிங்க காணப்படுகிறார்.

தாய்லாந்தின்,பாங்கொக் நகரில் இடம் பெற்ற யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2018 நிகழ்வு, இலங்கையிலுள்ள அனைவரும் பார்வையிடக் கூடிய வகையில் நேரடியாக சமூக ஊடக வலைத்தளங்களினூடாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. இதனூடாக இலங்கையிலுள்ள அனைவரும் இந்த உணர்வு பூர்வமான தருணத்தை மகிழ்ச்சிகரமாக அனுபவித்து வெற்றியாளர்களை வாழ்த்தியிருந்தனர்.

இம் முறை இடம்பெற்ற நிகழ்வில் சுமார் 250 வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். விருதுகள் வழங்கும் நிகழ்வின் முக்கிய விருதான “சம்பியன்களின் சம்பியன்” விருது கெளும் ஜயசிங்க வழங்கப்பட்டது. இந்த பெருமைக்குரிய விருதை கெளும் ஜயசிங்க நான்காவது தடவையாகவும் வெற்றியீட்டி, சாதனை படைத்திருந்தார்.

யூனியன் அஷ்யூரன்ஸின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக பிரிவின் பொது முகாமையாளர் தர்ஷன அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,“தொடர்ச்சியான 3ஆவது தடவையாக வெளிநாடொன்றில் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமைக்காக நாம் மிகவும் பெருமையடைகிறோம். எமது விற்பனை செயலணியினரின் சிறப்பாக செயற்பாட்டை அணியாக நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதனூடாக நிறுவனம் எனும் வகையில் எமது தன்னேற்புத்திட்டத்தை எய்துவதற்கு இது உதவியாக அமைந்திருக்கும். இந்நிகழ்வு முழு யூனியன் அஷ்யூரன்ஸ் விற்பனை செயலணிக்கும் மனம் மறவாத நினைவுகளைபெற்றுக் கொடுப்பதாக அமைந்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும், இது எமது விற்பனை செயலணியை ஊக்குவிப்பதுடன்,அவர்களை திறமை வாய்ந்த நிபுணர்களாக துறையில் காணப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு மேலும் ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும் எனவும் கருதுகிறோம்.”என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு 2018 வெற்றிகரமாக நிறைவடைந்திருந்ததுடன்,வாழ்க்கையை மாற்றியமைக்கும் பங்காண்மைகளின் வலுவூட்டல்கள் வெற்றிகரமாக இடம் பெற்றதனூடாக இந்த நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது.