Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

பகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்

யூனியன் அஷ்யூரன்ஸ் தனது மற்றுமொரு கிளையை பகமூன பகுதியில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இதன் மூலம் பகமூன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு பரிபூரண ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2015 ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி, பகமூன பேருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த புதிய கிளை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. பெருமளவான வாகனதரிப்பிட வசதியுடன், காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தனது சேவைகளை வழங்கும் வகையில் இந்த கிளை அமைந்துள்ளது. ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு சேவை பகுதிகள், ஊழியர்களுக்கு பயிற்சி பெறக்கூடிய பகுதிகள் மற்றும் மேலும் பல வாடிக்கையாளர் வசதிகள் போன்றன அனைத்து சந்தர்ப்பங்களைலும் வழங்கும் வகையில் இந்த புதிய கிளை அமைந்துள்ளது. பகமூன தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் பெருமளவு வியாபார நடவடிக்கைகள் இடம்பெறும் நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதன் காரணமாக தனது புதிய கிளையை இந்த பகுதியில் நிறுவுவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தீர்மானித்தது.

இந்த கிளை நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், பிரத்தியேக நிதி ஆலோசகர்களும் நவீன தொழில்நுட்ப வசதிகளை தம்வசம் கொண்டுள்ளனர். இவற்றில் டப்லெட் சாதனங்கள் மற்றும் ஒன்லைன் கட்டமைப்புகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. இந்த வரையறைகளற்ற வலையமைப்பின் மூலம் வாடிக்கையாளர்களின் இருப்பிட பகுதிகளுக்கு சென்று பரிபூரணமான சேவைகளை வழங்கக்கூடிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் ருக்மன் வீரரத்ன கருத்து தெரிவிக்கையில், 'பகமூன பகுதியில் முதலாவது ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில் எமது கிளைக் காரியாலயத்தை நாம் திறந்துள்ளதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். இந்த பிராந்தியத்தில் காணப்படும் சந்தை வாய்ப்புகள் அதிகளவு விரிவடைந்துள்ள நிலையில், அதிகளவு வளர்ச்சியை இந்த பகுதியில் எம்மால் பெற்றுக் கொள்ளலாம் என நாம் எண்ணியிருந்தோம். ஏதிர்காலத்திலும் பெருமளவான கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில் நாம் எமது சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அவசியமான தொழில் வாய்ப்புகளை வழங்கி வருவதுடன், அவர்களுக்கு பயிற்சிகளையும் வழங்குகிறது. இலங்கையின் தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் காப்புறுதி சார்ந்த தீர்வுகளை வழங்கி வருகிறது.

நிபுணத்துவமும் அனுபவமும் வாய்ந்த நிர்வாக குழுவினரையும், உறுதியான மூலதன இருப்பையும் கொண்டுள்ளதுடன், மீள் காப்புறுதிகளை மேற்கொள்வதற்கான திடமான பங்காண்மைகளை கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், 'நம்பிக்கை' எனும் தனது உறுதி மொழிக்கமைவாக வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான, வசதியான மற்றும் கௌரவத்துடனான சேவைகளை வழங்கி வருகிறது.