Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

2018இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப் பெறுபேறுகள்பதிவு

சவால்கள் நிறைந்த சூழலில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிகர தவணைக்கட்டண வழங்கல்களில் (GWP) 11% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2018 இல் பதிவு செய்திருந்த வரிக்கு பிந்திய இலாபமாக 3.2 பில்லியன் ரூபாய் காணப்பட்டது. 2017 இல் இந்தப் பெறுமதி 7.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதியில் 3.4 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு தடவைக் கொடுப்பனவும் அடங்கியிருந்தது. 2018 ஆம் ஆண்டுக்கான ஆயுள் நிதியத்திலிருந்து மாற்றப்பட்ட மேலதிகத் தொகையாக 1.1 பில்லியன் ரூபாய் பதிவாகியிருந்தது. 882 மில்லியன் ரூபாய் பங்குதாரர் முதலீட்டு இலாகாவிலிருந்து தோற்றுவிக்கப்பட்டிருந்ததுடன்,150 மில்லியன் ரூபாய் யூனியன் அஷ்யூரன்ஸின் பொதுகாப்புறுதி அலகான Fairfirst இன்சூரன்ஸ் லிமிடெட்டிடமிருந்து பெறப்பட்டிருந்தது.

மொத்த வருமானம் 1% சரிவை பதிவு செய்திருந்தது. இதில் பங்குகளிலிருந்து பதிவாகியிருந்த மாறாத இழப்புகள் பங்களிப்பு வழங்கியிருந்தன. 2018 இல் முதலீட்டு சூழல் என்பது பல்வேறு வெளியக மற்றும் உள்ளக அழுத்தங்களுக்கு முகங்கொடுத்திருந்தது. இந்த விடயங்கள் பங்குகளிலும்,நிலையான வருமான சொத்துக்கள் வகுப்பில் தளம்பல் நிலையை தோற்றுவித்திருந்தன.

முதிர்வு மற்றும் கைதுறப்பு கொடுப்பனவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக,தேறிய காப்புறுதி அனுகூலங்கள் மற்றும் நஷ்டஈடு வழங்கல்கள் 9% அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. யூனியன் அஷ்யூரன்ஸின் ஒப்பந்த கடப்பாடுகளுக்கமைய முதிர்வு கொடுப்பனவுகள் பதிவாகியிருந்ததுடன்,சவால்கள் நிறைந்த பொருளாதார சூழல் காரணமாக கைதுறப்பு கொடுப்பனவுகளில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. காப்புறுதி வழங்கல் மற்றும் கையகப்படுத்தல் செலவு 12% இனால் அதிகரித்து 2.1 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. GWP மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு கட்டமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தமையால் இந்த பெறுமதியில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. வர்த்தக நாம மற்றும் விநியோக நாளிகைகளை வலிமைப்படுத்துவதில் நாம் முதலீடுகளை மேற்கொண்டிருந்ததன் காரணமாக, இதரசெயற்பாட்டு,கண்காணிப்பு மற்றும் விற்பனை செலவீனங்கள் 41% இனால் அதிகரித்திருந்தது.

மேலதிக அடிப்படையிலான வருமான வரி நடைமுறைப்படுத்தப்பட்டதுடன்,புதிய உள்நாட்டு இறைவரித்திணைக்கள விதிமுறைகளின் பிரகாரம்,நிறுவனம் 1.6 பில்லியன் ரூபாய் வரி சொத்துக்களை கொண்டிருந்ததுடன்,வரிக் கட்டணமாக 541 மில்லியன் ரூபாயை கொண்டிருந்தது. இந்த இரு பெறுமதிகளும்,எதிர்காலவருமான வரி பொறுப்புகளின் மீது பயன்படுத்தப்படும்.

மேற்படி விடயங்கள் காரணமாக ஆயுள் நிதியத்தின் பெறுமதி14% இனால் அதிகரித்து 30.6 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. ஆரோக்கியமான மூலதனபோதுமை விகிதத்தையும் கொண்டுள்ளது. இதனூடாக வியாபாரத்தின் நிதி உறுதிப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வருடத்தில்,யூனியன் அஷ்யூரன்ஸ் தனது விநியோக மற்றும் செயற்பாட்டு இயலுமைகளை மேம்படுத்தியிருந்தது. முகவர் நாளிகையை மாற்றியமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பாங்கசூரன்ஸ் நாளிகையில்,எமது விநியோக உடன்படிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றுடன் மேம்படுத்தியிருந்தோம். இந்த பங்காண்மைகளினூடாக இரு நிறுவனங்களுக்குமிடையிலான திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவியுள்ளதுடன், இதுவரை சென்றடையாத சந்தைப் பிரிவுகளை சென்றடைவதற்கு பிரத்தியேகமான தயாரிப்பு மற்றும் சேவைத் தீர்வுகளையும் வழங்க இரு நிறுவனங்களையும் ஒன்றிணைத்துள்ளது.

தனது பிரதான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக யூனியன் அஷ்யூரன்ஸ் 800 மில்லியன் ரூபாயை முதலீடு செய்திருந்தது. இது 2018 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த புதிய கட்டமைப்பினூடாக புதிய தயாரிப்பு மேம்படுத்தல்,காப்புறுதி வழங்கல்,காப்புறுதிப் பத்திர நிர்வாகம், நஷ்டஈடு வழங்கல்,கட்டணப்பட்டியல்,சேகரிப்பு,கொடுப்பனவு மற்றும் ஒழுங்குபடுத்தல் அறிக்கையிடல் போன்ற நடவடிக்கைகளை மேம்படுத்த முடிந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் தனது செயற்பாடுகளுக்காக தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச கௌரவிப்புகளை பெற்றிருந்தது. உறுதியான வருமான பதிவை கொண்டிருந்தமைக்காக 2018 ஆகஸ்ட் மாதத்தில் யூனியன் அஷ்யூரன்ஸ்,போர்ப்ஸ் ‘Best Under A Billion’ நிரலில் தரப்படுத்தப்பட்டிருந்தது. இந்த பெருமைக்குரிய நிரலில் பங்கேற்ற ஒரே உள்நாட்டு நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவாகியிருந்ததுடன், இந்தநிரலில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 200 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும்,ஆசியாவின் மிகவும் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாம விருதுகள் 2018 இல்,“ஆசியாவில் அதிகளவு நம்பிக்கையை வென்ற ஆயுள் காப்புறுதி நிறுவனம்”எனும் கௌரவிப்பை பெற்ற இலங்கையின் ஒரே ஆயுள் காப்புறுதி நிறுவனம் எனும் பெருமையையும் யூனியன் அஷ்யூரன்ஸ் பெற்றுக் கொண்டது.

பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சம்மேளனத்தினால் தொடர்ச்சியாக 10ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலை பேறாண்மை விருதுகள் வழங்கும் நிகழ்வில் நிதி மற்றும் காப்புறுதித் துறையில் இணைவெற்றியாளராக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது.யூனியன் அஷ்யூரன்ஸ் அறிக்கையிடல் செயன்முறைகளை இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனம் கௌரவித்து,2017 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கைக்கு காப்புறுதிப் பிரிவில் வெள்ளிவிருது வழங்கப்பட்டதுடன், கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு அறிக்கையிடலுக்காக தங்க விருதையும் பெற்றுக் கொண்டது. வியாபாரத்தில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தமைக்காக,தேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2018 இல்,கூட்டாண்மை மேலாண்மைக்காக தங்கவிருதை யூனியன் அஷ்யூரன்ஸ் பெற்றுக் கொண்டது. மிகப் பெரிய பிரிவில் இரண்டாமிடத்தையும், காப்புறுதி பிரிவில் இணை வெற்றியாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ச்சியானஆறாவது வருடமாக,GreatPlace to Work நிறுவனத்திடமிருந்து இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது. வளர்ச்சிக்கும்,பிரத்தியேக அபிவிருத்திக்கும் சிறந்த வாய்ப்புகளை வழங்கும் நிறுவனமாக அமைந்துள்ளது.

சிறந்த மேலாண்மை செயற்பாடுகளுக்காக உறுதியான வர்த்தக நாம கௌரவிப்பையும், நன் மதிப்பையும் யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த அணியினரைக் கொண்டு செயலாற்றிவருவதுடன்,நிதி வலிமை மற்றும் வாடிக்கையாளர் நோக்குடன் இயங்குகிறது. எதிர்வரும் காலங்களிலும் சகல பங்காளர்களுக்கும் நிலைபேறான பெறுமதியை பெற்றுக் கொடுப்பதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் எதிர்பார்த்துள்ளது.