Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் “துடிப்பான எதிர்காலம், நீரிழிவை தடுப்போம்” நிகழ்ச்சியுடன் யூனியன் மனிதாபிமானம் கைகோர்ப்பு

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் சமூகப் பொறுப்புணர்வு வாய்ந்த வர்த்தக நாமமான யூனியன் மனிதாபிமானம், தலசீமியா, நீரிழிவு மற்றும் டெங்கு ஆகிய நோய்களை தவிர்த்துக் கொள்வது தொடர்பாக பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. இந்த அனைத்து செயற்பாடுகளும் யூனியன் மனிதாபிமானம் - அறிவார்ந்த, ஆரோக்கியமான, வளமானஎதிர்காலம் என்பதற்கமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.

“துடிப்பானஎதிர்காலம்,நீரிழிவைதடுப்போம்”நிகழ்ச்சியில் நாரத மற்றும் தனுஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இலவச நீரிழிவு மற்றும் BMI பரிசோதனைகள்
கண் பரிசோதனை முகாம்
நீரிழிவு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு அமர்வுகள்.

நீரிழிவை தவிர்ப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,யூனியன் மனிதாபிமானத்தினூடாக விசேட செயற்திட்டமொன்று“துடிப்பான எதிர்காலம், நீரிழிவை தடுப்போம்”‘Be Active. Be Sugar Free’ (ක්රියාශීලිහෙටක්, දියවැඩියාවටතිතක්) எனும் தொனிப்பொருளில் டிசம்பர் 8 ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்றது. இதில் 150க்கும் அதிகமான பங்கு பற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர். புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களான நாரத மற்றும் தனுஜா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இந்த திட்டத்தினூடாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தனர்.

நீரிழிவு தவிர்ப்பு தொடர்பிலும், கட்டுப்படுத்துவது தொடர்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்ததிட்டம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக இலவச நீரிழிவு பரிசோதனைகள், BMI பரிசோதனை, கண் பரிசோதனை, நீரிழிவு தொடர்பான அறிவு பகிர்வு அமர்வுகள் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறையை முன்னெடுப்பதற்கு அவசியமானதகவல்களை வழங்கும் கூடங்களும் இதில் உள்ளடங்கியிருந்தன.

இந்த நிகழ்வை வெற்றிகரமான முன்னெடுப்பதற்கு CDEM (Center for Diabetes Endocrinology and Cardio – Metabolism) முக்கிய பங்களிப்பை வங்கியிருந்தது. உத்தியோகபூர்வ மருத்துவ சேவை வழங்குநராக இயங்கியிருந்தது. Goyo, Awidinno மற்றும் Yaman ஆகியனவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னெடுப்பது தொடர்பில் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு வழிகாட்டியிருந்தன. Eat Right மூலமாக மக்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஒரு நாளுக்கு பொதுமக்களுக்கு சீனி அடங்கிய பொருட்களை உட்கொள்வதிலிருந்து விலகி இருக்குமாறு கோரும் சவால் வழங்கலுடன் இந்த “துடிப்பான எதிர்காலம், நீரிழிவை தடுப்போம்” நிகழ்ச்சி நிறைவடைந்திருந்தது. இந்த சவாலை நாரத மற்றும் தனுஜா ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். இந்த சவாலை பின்பற்றும் போது அவர்கள் எதிர்கொண்டிருந்த தடைகள் பற்றிய விவரங்கள் யூனியன் அஷ்யூரன்ஸின் Facebook, Instagram மற்றும் YouTube பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

யூனியன் மனிதாபிமானம் தொடர்ந்தும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகங்களை கட்டியெழுப்புவதற்கு தனது பங்களிப்பை வழங்கும். சமூகங்களில் தமது தாக்கங்களை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் ஊடகங்களை கையாள்வதுடன்,நாடு முழுவதும் சென்றடையும் வகையில் திட்டங்களை வகுத்துள்ளது. நம்பிக்கை எனும் உறுதி மொழிக்கமைய நிறுவனம் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதுடன்,எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்புவதற்காக இவ்வாறான திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளன.