Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

தேசியவர்த்தகசிறப்புவிருதுகள் 2018 நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ்க்கு கௌரவிப்பு

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2018 நிகழ்வில், யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு மூன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

கூட்டாண்மை மேலாண்மை சிறப்பு தங்க விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பெற்றுக் கொள்கிறது.
காப்புறுதிப்பிரிவில் தங்க விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பெற்றுக்கொள்கிறது.
மிகப் பெரிய பிரிவில் மூன்றாமிட விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் அணிபெற்றுக் கொள்கிறது.

கூட்டாண்மை மேலாண்மை பிரிவில் தங்க விருதை சுவீகரித்திருந்ததுடன், மிகப் பெரியபிரிவில் மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டதுடன்,காப்புறுதி பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில்,“இந்த பெருமைக்குரிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியான கௌரவிப்பை பெறமுடிந்தமையானது சிறந்த கௌரவிப்பாக அமைந்துள்ளது. எமது சகல பங்காளர்களுக்கும் இந்த விருதுகளை நாம் அர்ப்பணிப்பதுடன்,எதிர்வரும் ஆண்டுகளிலும் எமது செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தி இவ்வாறான சிறப்புகளை எய்ததிட்டமிட்டுள்ளோம்” என்றார்.

30 வருடகால பூர்த்தியை யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டாடுவதுடன், இலங்கையின் காப்புறுதித் துறையில் புத்தாக்கம் மற்றும் வலிமையான நிறுவனமாகவும் திகழ்கிறது. 120 க்கும் அதிகமான பகுதிகளில், 4500க்கும் அதிகமான கள உத்தியோகத்தர்களைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கும், பங்காளர்களுக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் தனது சேவைகளை வழங்குகிறது.