Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்

இலங்கையின் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழும் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிலும் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. புரள்வு பெறுமதி மற்றும் இலாபம் ஆகியன 3ஆம் காலாண்டில் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், தேறிய தவணைக்கட்டண வழங்கல்கள் பெறுமதியும் 3ஆம் காலாண்டில் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. 2015 செப்டெம்பர் 30 ம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் தேறிய தவணைக்கட்டண வழங்கல்கள் 5.0 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. 16 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் தவிர்ந்த வியாபாரத்தின் ஒதுக்கங்கள் தவிர்த்த கம்பனியின் மொத்த வருமானம் இந்த காலப்பகுதியில் 6.7 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1 சதவீத அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்புடனான தேறிய வருமானம் 7.9 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.

ஒதுக்கப்பட வேண்டிய வருமானம் உள்ளடங்கலாக வரிக்குப்பிந்திய இலாபம் 1.5 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. ஒதுக்கப்பட வேண்டிய வருமானம் தவிர்ந்த வரிக்குப் பிந்திய இலாபம் 245 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இது 2014 இல் 101 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. 2015 இன் 3ஆம் காலாண்டில் ஆயுள் வியாபாரத்தின் மிகை பெறுமதியை கணக்கில் கொள்ளவில்லை என்பதுடன், இந்த பெறுமதி வருட நிறைவில் அசல் பெறுமதி மதிப்பிடுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

2015 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று, யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் நிதியப் பெறுமதி 26 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இந்த ஆரோக்கியமான நிதி ஒதுக்கப் பெறுமதி, கம்பனி வியாபாரத்தின் நிதி உறுதித் தன்மையை வெளிப்படுத்தியிருந்தது.

'நம்பிக்கை' எனும் தனது வர்த்தக நாம் உறுதி மொழியை பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு புத்தாக்கமான வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கம்பனி திட்டமிட்டுள்ளது. தனது சகல பங்காளர்களுடனும் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களின் போது, வசதியான, வெளிப்படையான மற்றும் கௌரவத்துடனான பிணைப்புகளை பேண யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது.