Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

3ஆம்காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிதிப்பெறுபேறுகள் முன்னேற்றகரமாகப் பதிவு

யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானநிதிப் பெறுபேறுகளைபதிவுசெய்திருந்ததுடன்,முன்னையஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகரவழங்கியகாப்புறுதிதவணைக்கட்டணவளர்ச்சியாக9மூ ஐ பதிவுசெய்திருந்தது. இக்காலப்பகுதியில் முதலீடுகளினூடாகபெறப்பட்டவருமானம் 13மூ இனால் அதிகரித்து3036 மில்லியன் ரூபாயாகபதிவாகியிருந்தது. முன்னையஆண்டுடன் ஒப்பிடுகையில் செலவீனங்கள் அதிகமாககாணப்பட்டபோதிலும்,வியாபாரத்தின் நீண்டகாலதேவைகளைகவனத்தில் கொண்டுஅவைசெலவிடப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

வரிக்குப் பிந்திய இலாபம் 2,242 மில்லியன் ரூபாயாகபதிவாகியிருந்தது. 2017ஆம் ஆண்டின் இதேகாலப்பகுதியில் இந்தப் பெறுமதி 267 மில்லியன் ரூபாயாகபதிவாகியிருந்தது. புதியவரிவிதிமுறைஅறிமுகம் செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து,2017ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்ட இல. 24 இன் 67 ஆம் பிரிவின் பிரகாரம்,2018 டிசம்பர் 31 ஆம் திகதியிலிருந்துவரிசெலுத்தவேண்டியவருமானத்தைகொண்டிருக்கும். இதனூடாக6 வருடகாலப்பகுதியினுள் நிறுவனம் பதிவுசெய்திருந்தவரி இழப்புகளைதனதுவரிக்குட்பட்டவருமானத்தில் சீராக்கம் செய்யவாய்ப்புக் கிடைத்திருந்தது.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்டகாலாண்டில்,வரிச் சொத்துக்களின் பெறுமதி 1532 மில்லியன் ரூபாயாகபதிவாகியிருந்தது. 2017 டிசம்பர் 31ஆம் திகதிமுன்கொணரப்பட்டிருந்தவரி இழப்புகளின் காரணமாக இந்தப் பெறுமதிபதிவாகியிருந்தது.

3ஆம் காலாண்டுவரையிலான இலாபத்தில் ஆயுள் வியாபாரத்தின் மேலதிகபெறுமதிகள் எதனையும் கொண்டிருக்கவில்லைஎன்பதுடன், இந்தப் பெறுமதிவருட இறுதியில் கணிப்பிடப்பட்டுஉள்ளடக்கப்படும்.

ஆரோக்கியமானதிரள்வுவிகிதத்துடன்,2018 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று ஆயுள் நிதியத்தின் பெறுமதி 31 பில்லியன் ரூபாயாகபதிவுசெய்து,நிதிஉறுதிப்பாட்டைவெளிப்படுத்தியிருந்தது.

இந்தகாலாண்டுபருவத்தில் யூனியன் அஷ்யூரன்ஸ் பலஉள்நாட்டுமற்றும் சர்வதேசகௌரவிப்புகளையும் பெற்றுக் கொண்டது.

உறுதியானநிதிப் பெறுபேறுகளைவெளிப்படுத்தியிருந்தமையின் காரணமாக,ஃபோர்ப்ஸின் பில்லியனுக்குகுறைந்த 2018 ஆம் ஆண்டின் தரப்படுத்தலில் உள்ளடக்கப்பட்டிருந்தஒரே இலங்கைநிறுவனமாகவும் தெரிவாகியிருந்தது. ஆசியபிராந்தியத்திலிருந்து இந்ததரப்படுத்தலுக்காகசுமார் 24,000 நிறுவனங்கள் தகைமைபெற்றிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

தமதுநுகர்வோர் முகப்பானவியாபாரத்தில் சிறந்தபெறுபேறுகளையூனியன் அஷ்யூரன்ஸ் பதிவுசெய்திருந்தமைக்காக,ஆசியாவின் சிறந்தவேகமாகவளர்ந்துவரும் வர்த்தகநாமங்களில் ஒன்றாக,ஆசியபிராந்தியத்தைச் சேர்ந்தஒரே ஆயுள் காப்புறுதிச் சேவைகளைவழங்கும் நிறுவனமாககௌரவிக்கப்பட்டிருந்தது. 25 க்கும் மேற்பட்டஆசியநாடுகளில் மீடியாரிசேர்ச் குரூப் (MRG)முன்னெடுத்திருந்தஆய்வுகளினூடாகஇந்தவிருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

பணியாற்றும்சூழலைமேம்படுத்தும்வகையில்தனதுசிறந்தசெயற்பாடுகளை தொடர்ந்துமுன்னெடுத்துவரும் யூனியன் அஷ்யூரன்ஸ்,Great Place to Work இனால் தொடர்ந்துஆறாவதுஆண்டாகவும் கௌரவிக்கப்பட்டிருந்தது.

அனுபவம் வாய்ந்தமற்றும் நிபுணத்துவம் வாய்ந்தஊழியர்களைதன்வசம் கொண்டு இயங்கிவரும் யூனியன் அஷ்யூரன்ஸ்,உறுதியான மூலதன இருப்பைகொண்டுள்ளதுடன்,உலகளாவியரீதியில் உயர் தரம் வாய்ந்தமீள் காப்புறுதியாளர்களுடன் மீள்காப்புறுதிபங்காண்மைகளைபேணிவருகிறது. 30 வருடங்களுக்குமேலானகாப்புறுதிசிறப்புசேவையைவழங்கிவரும் யூனியன் அஷ்யூரன்ஸ்,மக்கள்,தீர்வுகள் மற்றும் செயன்முறைகளைமேம்படுத்துவதற்காகதொடர்ச்சியாகதனதுமுதலீடுகளை மேற்கொண்டவண்ணமுள்ளது. இதனூடாகஅனைத்துபங்குதாரர்களுடனும் வாழ்க்கையைமாற்றியமைக்கும் பிணைப்பைஏற்படுத்துவதுநிறுவனத்தின் நோக்காகும்.