Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்

உயர் பெறுமதியை வழங்குவது மற்றும் துறையின் நியமங்களுக்கு உயர்வான சேவைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில், யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் பிரிவு தனது முதல் தர தீர்வான யூனியன் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் திட்டத்தை இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளது. பாங்கசூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒப்பற்ற மற்றும் உயர் தர சேவையாக இது அமைந்துள்ளது. இந்த பிரத்தியேக சலுகையின் பின்புலத்தில் அங்கத்தவர்களுக்கு வெகுமதிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த உயர்தர சேவை, பிரதானமாக வாடிக்கையாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரத்தியேகமான சேவைகள், குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வசதிகள் போன்றனவும் இதில் அடங்கியுள்ளன. இந்த வட்டத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக பெருமைப்படக்கூடிய வகையில் பேணும் வகையில் அமைந்துள்ளது

தனது அல்ட்ரா ப்ளஸ் வாடிக்கையாளர்களுக்கு தற்போது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக, யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வெகுமதிகள் மற்றும் சேவைகளை மேலும் விஸ்தரிப்பதற்கு எண்ணியுள்ளது. நாள் முழுவதும் இருபத்து நான்கு மணிநேரமும் முதல் தர சேவையை அங்கத்தவர்களுக்கு வழங்குகிறது. இதனூடாக அங்கத்தவர்களுக்கு தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், 'எமது வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான வகையில் திகழ்வது என்பது யூனியன் அஷ்யூரன்ஸை பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்வதுடன், உயர்ந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் பெருமை கொள்கிறது. யூனியன் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் என்பது, வாடிக்கையாளர்களின் தேவைகளை இனங்காணும் மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் தேவைகளை நேரடியாக நிவர்த்தி செய்யும் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பங்காளராக திகழ்கிறது' என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையின் மாபெரும் ஆயுள் காப்புறுதி தீர்வுகள் வழங்குநராக திகழ்வதுடன், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல.;சியின் வலிமை மற்றும் உறுதித்தன்மையுடன் இயங்குகிறது. 30 வருட கால சிறப்பை கொண்டாடுவதுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியாக மக்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் முதலீடுகளை மேற்கொள்வதனூடாக தனது சகல பங்காளர்களினதும் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பங்காளராக திகழ்கிறது. யூனியன் அஷ்யூரன்ஸை பொறுத்தமட்டில் பாங்கசூரன்ஸ் பிரதான விநியோக நாளிகையாக திகழ்கிறது. அனுபவம் வாய்ந்த அணி, நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சகல வாடிக்கையாளர்களுக்கும் சௌகரியம், உதவி மற்றும் ஒப்பற்ற சேவையை வழங்கி வருகிறது.