Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியினால் முன்னெடுக்கப்படும் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்தும் மையப்படுத்தப்பட்டனவாக அமைந்துள்ளன. நாட்டில் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான சமூகங்களை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டன. இந்த இலக்குக்கு அடிப்படையாக சகல சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது என்பதற்கு அமைவாக, யூனியன் அஷ்யூரன்ஸ் சகல சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளையும் ஒரே வர்த்தக நாமமான யூனியன் மனிதாபிமானம் - அறிவார்ந்த, ஆரோக்கியோமான, வளமான எதிர்காலம் என்பதற்கமைய முன்னெடுக்கிறது.

சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகள் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் கிளைகளில் பணியாற்றும் ஊழிய அங்கத்தவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் யூனியன் மனிதாபிமானம் ஊடாக 50க்கும் அதிகமான டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 100க்கும் அதிகமான தலசீமியா விழிப்புணர்வு நிகழ்வுகளும் 45க்கும் அதிமான நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2017ம் ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகளில், வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தல், சிரமதான நிகழ்வுகள், கையேடுகள் விநியோகித்தல், ஸ்டிக்கர் விநியோகம் மற்றும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்த முதலாவது டெங்கு மாதிரி செயற்திட்டம் போன்றன அடங்கியிருந்தன. வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் 12 நடவடிக்கைகளும் சிரமதான நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், 39 கையேடுகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டுதல் செயற்திட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதலாவது டெங்கு மாதிரி செயற்திட்டம் 2017 ஜனவரி 5ம் திகதி கிருலப்பனை, சித்தார்த்தபுர வீடமைப்பு தொகுதியில் ஆரம்பமாகியிருந்ததுடன், இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2018 ஜனவரி 20ம் திகதி வெற்றிகரமாக பூர்த்தியடைந்திருந்தது. சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மத்தியில் டெங்கு பிரச்சினை தொடர்பில் மாற்றத்தை ஏற்படுத்துவது இந்த விசேட திட்டத்தின் இலக்காக அமைந்திருந்தது.

மேலும், நீரிழிவு நோய் பரவுவதை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிகளின் போது நோய் நிலையை முன்கூட்டிய இனங்காணல் 47; நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அவர்களின் குருதியில் காணப்படும் சீனியின் அளவை கட்டுப்படுத்திக் கொள்வது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன. இதனூடாக அவர்களுக்கு சுகாதாரமான வாழ்க்கை முறையை ஏற்படுத்தி வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், 2017 நவம்பர் மாதம் 14ம் திகதி சர்வதேச நீரிழிவு தினத்தை குறிக்கும் வகையில், நேரடி மின்னஞ்சல் அனுப்பும் நடவடிக்கையொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது.

மற்றுமொரு பாரிய குருதி தொடர்பான குறைபாடான, தலசீமியா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது. இதன் பிரகாரம், 30 தலசீமியா விழிப்புணர்வு நிகழ்வுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. இதில் 75க்கும் அதிகமான குருதி பரிசோதனை நிகழ்வுகள் அடங்கியிருந்தன. இந்த குறைபாடு பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை சமூகங்களில் ஏற்படுத்தியிருந்தது. தேசிய தலசீமியா நிலையம் - குருநாகல் மற்றும் ஹெமால் கட்டிளைமப்பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களுக்கான தலசீமியா நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து சகல நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வெளிப்படைத்தன்மை, மதிப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுடன் பங்காண்மைளை ஏற்படுத்தி, அதன் பிரகாரம் பாதுகாப்பான மற்றம் சுகாதாரமான சமூகத்தை உருவாக்குவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. நம்பிக்கை எனும் தனது உறுதி மொழிக்கமைய நிறுவனம் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதுடன், எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தும். யூனியன் மனிதாபிமானம் எனும் நாமத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் செயற்படுத்தப்படுகின்றது.