Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

எதிர்காலத்துக்கான அரவணைப்பு: நீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்

இலங்கையிலுள்ள சமூகங்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்கள் புகழ்பெற்றுத் திகழ்கின்றன. டெங்கு மற்றம் தலசீமியா ஒழிப்பு தொடர்பான செயற்திட்டங்களில் முன்னர் ஈடுபட்டிருந்த இந்நிறுவனம், தற்போது நீரிழிவு நோய் ஒழிப்பு தொடர்பில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது. இலங்கையர்கள் மத்தியில் நீரிழிவு நோய் பெருமளவு பரவி வருவதுடன், பாரிய சமூகப் பிரச்சினையாகவும் தலைதூக்கியுள்ளது.

நீரிழிவுநோய்னால் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ளவர்களை இனங்காண்பது, அத்துடன் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடுப்பு மருந்துகளை வழங்குவது, முற்பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகளில் தவிர்க்கக்கூடிய செயற்பாடுகளை தெளிவுப்படுத்துவது போன்றன யூனியன் அஷ்யூரன்ஸினால் மேற்கொள்ளப்படும் செயற்பாட்டு அங்கங்களாக அமைந்துள்ளன. முதல் கட்டமாக இரு திட்டங்கள் ஒக்டோபர் மாதம் 15 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் ஆகியவற்றின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த ஆரம்ப கட்ட செயற்திட்டத்தின் மூலமாக, யூனியன் அஷ்யூரன்ஸ் நீரிழிவு தவிர்ப்பு நிகழ்ச்சியூடாக 250 பேருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தது. இதில் 58 பேருக்கு நீரிழிவு இருப்பது இனங்காணப்பட்டிருந்தது, 107 பேர் நீரிழிவால் பாதிக்கப்படுவதற்கு அதிகளவு வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற பலர், தமக்கு இந்த நோய் நிலை காணப்படுவது பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு என்பது ஒரு தொற்றா நோயாகும், உலகளாவிய ரீதியில் பல நாடுகளை இந்த நோய் தற்போது பாதித்த வண்ணமுள்ளது. இந்நோயின் நீண்ட கால பாதிப்புகள் காரணமாக, நீரிழிவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இருதயம் சம்பந்தமான நோய்கள், சிறுநீரக குறைபாடுகள், கண்பார்வை குறைவடைதல், நலிவடைந்த நரம்புத் தொகுதி போன்ற குறைபாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். எனவே, இந்த நோய் குறித்து முறையான கவனம் செலுத்தப்படாதவிடத்து, அதன் காரணமாக எதிர்நோக்க நேரிடும் இடர்கள் பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நீரிழிவுக்கான சிறந்த சிகிச்சை முறையாக, பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள, சிறந்த சுகாதாரமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவது அமைந்தள்ளது. அத்துடன், அளவை அடிக்கடி பரிசோதித்துக் கொள்வதும் சிறந்தது.

'நீரிழிவு என்பது, எமது சமூகம் எதிர்நோக்கியுள்ள பாரிய நோயாக அமைந்துள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும், போதியளவு விழிப்புணர்வின்மை, ஆரோக்கியமற்ற பழக்கங்கள் மற்றும் செயன்முறைகளுக்கு மக்கள் தம்மை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளமை போன்றன இதற்கு காரணங்களாக அமைந்துள்ளன. எனவே, அடிக்கடி பரிசோதித்துக் கொள்வது சிறந்ததாகும். உங்களுக்கு இந்நோய் இல்லாவிடின் கூட, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் இடரைக் குறைத்துக் கொள்ளலாம்' என கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களத்தின் பிரதம அதிகாரி வைத்தியர். ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

யூனியன் அஷ்யூரன்ஸின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகப் பிரிவின் பொது முகாமையாளர் ருக்மன் வீரரட்ன கருத்துத் தெரிவிக்கையில், 'டெங்கு மற்றும் தலசீமியா செயற்திட்டங்களுக்கு எமக்கு பொது மக்களிடமிருந்து பெருமளவு வரவேற்பு காணப்பட்டது. ஆரம்ப கட்ட இரு நிகழ்ச்சித்திட்டங்களும் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த சேவையின் மூலமாக சமூகத்துக்கு வழங்கப்படும் பெறுமதி சேவை பற்றியும் நாம் தெளிவாக அறிந்து கொண்டோம். எமது செயற்பாடுகளின் மூலமாக, எமது சமூகத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒரு நோயை கட்டுப்படுத்த முடியுமாயின், நாம் எமது பங்களிப்பை வழங்கியுள்ளோம் என எம்மால் கருத முடியும். கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களத்திடமிருந்து எமக்கு அளப்பரிய உதவியும், வழிகாட்டல்களும் கிடைத்திருந்தது. அத்துடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இந்த செயற்திட்டத்துக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

காப்புறுதி துறையில் 25 வருடங்களை பூர்த்தி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ், துறையில் நிபுணத்துவம் வாய்ந்த காப்புறுதி நிபுணர்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், உறுதியான மூலதன இருப்பையும் கொண்டுள்ளது. மேலும் சர்வதேச ரீதியில் முன்னிலையில் திகழும் மீள் காப்புறுதியாளர்களுடன் பங்காண்மைகளையும் பேணி வருகிறது. 'நம்பிக்கை' எனும் யூனியன் அஷ்யூரன்ஸின் வர்த்தக நாம வாக்குறுதியை பேணும் வகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு வசதியான முறையிலும், கௌரவமான முறையிலும், வெளிப்படையான வகையிலும் கடந்த 25 ஆண்டு காலமாக தனது சேவைகளை வழங்கி வருகிறது.