Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

குளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது

இலங்கையில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாஸ்டர் பிரான்ட் விருதுகள் வழங்கும் நிகழ்வில் 2017 – 2018 காலப்பகுதிக்கான குளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி தனதாக்கியிருந்தது. இந்நிகழ்வு 2017 ஜுலை 13ம் திகதி தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. வேர்ள்ட் மார்கெட்டிங் காங்கிரஸ் மற்றும் ஊஆழு ஏசியா ஆகியவற்றினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் காப்புறுதித்துறையில் இந்த பெருமைக்குரிய நிலையை பெற்றுக்கொண்ட ஒரே நிறுவனம் எனும் பெருமையை யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸின் வர்த்தக நாம கொள்கை நம்பிக்கை எனும் உறுதி மொழிக்கமைய சரியான பாதையில் மூன்று பிரதான பெறுமதிகளுடன் அமைந்துள்ளது. வெளிப்படையாக திகழ்வது எனும் அதன் உறுதி மொழிக்கமைய யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்து தனது நிலையை மேம்படுத்தி வருவதுடன், சௌகரியம் என்பதற்கமைய சகல வியாபார கொடுக்கல் வாங்கல்களை எவ்வேளைகளிலும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வகையில், எளிமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுடன் நன்மதிப்புடன் சகல கொடுக்கல் வாங்கல்களையும் பேணுகிறது.

சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி கசுன் சமீர கருத்துத் தெரிவிக்கையில், 'வர்த்தக நாம வரலாற்றில் 30 ஆண்டு காலமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தனது பயணத்தை தொடர்ந்து, சேவைச் சிறப்புகளினூடாக இலங்கையில் காணப்படும் நம்பிக்கையை வென்ற காப்புறுதி நிறுவனமாக உயர்ந்துள்ளது. மாஸ்டர் பிரான்ட் நிலை எனும் பெருமைக்குரிய ஸ்தானம் கிடைத்துள்ளமையின் மூலமாக, எமது நிலையை வரையறைகளுக்கு அப்பால் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. தனிநபர்கள் மற்றும் அணிகளுக்கு எதிர்கால இலக்குகளை எய்துவதற்கு இந்த பெருமைக்குரிய நிலை பெரிதும் உதவியாக அமைந்திருக்கும்' என்றார்.

தனது உண்மையான பெறுமதிகளை வழங்குவது மற்றும் சேவைச் சிறப்பு ஆகியவற்றில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளதுடன், வெற்றியை எய்துவதில் உண்மையான பங்காளராகவும் அமைந்துள்ளது.