Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்

காப்புறுதி ஒப்பந்தங்களில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியான சொற்பதங்கள் துறையில் காணப்படும் சிக்கலான விடயங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் அண்மையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இலங்கையின் ஆயுள் காப்புறுதித்துறையில் முதலாவது செயற்திட்டமாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆயுள் காப்புறுதி ஆவணங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் மூலம், காப்புறுதி நியதிகள் மற்றும் நிபந்தனைகள் போன்றன தெளிவான முறையில் விளக்கமளிப்பதாக அமைந்திருக்கும். இலகுவில் தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

இதன் பிரகாரம், யூனியன் அஷ்யூரன்ஸினால் வழங்கப்படும் சகல காப்புறுதி ஆவணப்பத்திரங்களும் QR குறியீடுகளை கொண்டிருக்கும். இவை ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படும் என்பதுடன், இதை ஸ்மார்ட்ஃபோன் அல்லது டப்லெட் கணினியில் மென்பொருளின் உதவியுடன் தெளிவான எளிமையான மொழி நடையில் பார்வையிடக்கூடியதாக அமைந்திருக்கும்.

நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா தனது கருத்துக்களை வெளியிடுகையில், 'யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி ஒப்பந்தங்கள் தொடர்பில், வெளிப்படைத்தன்மை மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான செயற்பாடொன்றை அறிமுகம் செய்வதையிட்டு நாம் திருப்தியடைகிறோம். எம்மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது உறுதி செய்யும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்' என்றார்.

'ஆயுள் காப்புறுதி என்பது, பொதுவில் சிக்கலான விடயமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பலருக்கு ஆயுள் காப்புறுதியின் உண்மையான பெறுமதியை அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது. ‘Bring Your Policy Book to Life’ எனும் முறையின் அறிமுகத்துடன், காப்புறுதி எளிமைப்படுத்தப்பட்ட உள்ளம்சத்துடனான காப்புறுதி புத்தகம், இந்த சவாலுக்கு வினைத்திறனான வகையில் தீர்வை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனக்கருதுகிறோம். மேலும் பலருக ;கு ஆயுள ; காப்புறுதித்திட்டமொன்றுடன் இணைந்து கொள்வதற்கு ஊக்குவிப்பதாகவும் அமைந்திருக்கும்' என ஆயுள் பிரிவின் பொது முகாமையாளர் இரோஷினி தித்தகல தெரிவித்தார்.

நம்பிக்கை எனும் உறுதி மொழிக்கமைய தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், சௌகரியம், மதிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற வர்த்தக நாம பெறுமதிகளின் அடிப்படையில் இயங்குகிறது. தனது வியாபார செயற்பாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பிணைத்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், ஒப்பற்ற வாடிக்கையாளர் சௌகரியத்தை பெற்றுக்கொடுப்பதாக அமைந்துள்ளது. 'நம்பிக்கையான பாதுகாப்பு' எனும் உறுதிமொழியின் பிரகாரம் தனது செயற்பாடுகளை வாடிக்கையாளர்கள் மற்றும் சகல பங்காளர்களுடனும் முன்னெடுப்பதற்கும் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.