Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

சிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் பின்பற்றி வரும் சிறந்த மனித வளங்கள் செயற்பாடுகளுக்காக தொடர்ச்சியாக கௌரவிப்பை பெற்ற வண்ணமுள்ளது. இந்த செயற்பாடுகளினூடாகரூபவ் பெறுமதி வாய்ந்த மக்களை மைப்படுத்திய நிறுவனமொன்றை உருவாக்குவதற்கு முடிந்தது. மேலும் நிறுவனத்தின் இலக்குகளை நோக்கி பயணிப்பதற்கு மூலோபாய பங்களிப்பை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

சிறந்த மனித வளங்கள் செயற்பாடுகளை கௌரவித்துரூபவ் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு இரு பெருமைக்குரிய விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற Sri Lanka Best Employer Brand Awards வழங்கும் நிகழ்வில் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வை World HRD Congress ஏற்பாடு செய்திருந்தது. யூனியன் அஷ்யூரன்ஸினால் Best Employer Brand Award மற்றும் Dream Employer of The Year ஆகியன வெல்லப்பட்டிருந்தன

யூனியன் அஷ்யூரன்ஸினால் முன்னெடுக்கப்பட்டிருந்த மனித வளங்கள் செயற்பாடுகள், மீண்டுமொரு தடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. Asia Banking , Financial Services & Insurance Excellence Awards நிகழ்வில், நிதிப்பிரிவில் சிறந்த மனித வளங்கள் செயற்பாடுகளுக்கான விருதையும் பெற்றுக்கொண்டது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 2ம் திகதி சிங்கப்பூரின் Le Meridien ஹோட்டலில் நடைபெற்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பதிவு செய்திருந்த சிறந்த மனித வளங்கள் செயற்பாடுகள் தொடர்பில் மனித வளங்கள் பிரிவின் பொது முகாமையாளர் சுரேஷ் முத்தையா கருத்துத் தெரிவிக்கையில், 'மனித வளங்கள் பிரிவில் இவ்வாறான பல விருதுகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாம் இயங்கும் துறையில், எமது மனித மூலதனம் பிரதான வேறுபடுத்தும் அங்கமாக அமைந்துள்ளது. அதேவேளை, நிறுவனத்தின் நோக்கத்துடன், மூலோபாய அடிப்படையில் மனித வளங்கள் மூலதனத்தை ஒன்றிணைப்பது பற்றியும் கவனம் செலுத்துகிறோம். ஊழியர் அபிவிருத்தியில் நிலைபேறான அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்வது, வளர்ச்சிக்காக புதிய விடயங்களை அறிமுகம் செய்வது மற்றும் ஊழியர்களுக்கு வலுவூட்டல் போன்றன யூனியன் அஷ்யூரன்ஸினால் முன்னெடுக்கப்படுவதுடன், மனித வளங்கள் செயற்பாட்டில் சிறப்பான நிலையை எய்துவதற்கு முக்கிய காரணிகளாகவும் அமைந்துள்ளன. எம்மை பொறுத்தமட்டில் இந்த சகல கௌரவிப்புகளும் நேர்த்தியான விடயங்களாக அமைந்திருக்கும், நாம் இயங்கும் நிறுவன கட்டமைப்பில் மிகவும் சிறப்பானவையாகவும் திகழும்' என்றார்.

ஊழியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் நிறுவனம் எனும் வகையில், அவர்களின் வெற்றியின் அடிப்படையில் இயங்கி வருவதுடன், எதிர்காலத்தில் எய்தப்படவுள்ள பல நேர்த்தியான செயற்பாடுகளுக்கான அடித்தளமாக இந்த கௌரவிப்புகள் அமைந்துள்ளன. மேலும், முழு செயலணியினருக்கும் வரையறைகளுக்கு அப்பால் சென்று சிறப்பாக செயலாற்ற ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்.