Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

தொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு

The Great Place to Work© (GPTW நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்கள் தெரிவு ஆய்வில் தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு சினமன் கிரான்ட் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளாக இந்த விருதுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவாகியிருந்தமைக்காக விசேட கௌரவிப்பு விருதும் வழங்கப்பட்டிருந்தது.

Great Place to Work இனால் தொடர்ச்சியாக கௌரவிக்கப்பட்டுள்ளமையானது யூனியன் அஷ்யூரன்ஸுக்கு உயர் நம்பிக்கை வாய்ந்த பணியாற்றும் சூழலை கட்டியெழுப்புவதற்கு உதவியிருந்தது. எமது ஊழியர்களை ஊக்குவிப்பது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன் எமது ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக தமது தொழிலில் வெற்றிகரமாக இயங்குவதற்கு அவசியமான வழிகாட்டல்களை வழங்குவதுடன் எமது வாடிக்கையாளர்களில் நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்த வழிகோலுவதாக அமைந்திருக்கும். அத்துடன் தம்மை வளர்த்து சமூகத்துக்கு பங்களிப்பு வழங்குவதற்கு ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்.

பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக திகழ்வது என்பது வெறுமனே உணர்வுடன் தொடர்புடைய விடயமாக மட்டும் அமைந்துவிடாமல் வியாபார ரீதியிலும் அனுகூலங்களை பெற்றுக்கொடுப்பதாக அமைந்துள்ளது. இதில் ஊழியர் வர்த்தக நாமமிடல் மற்றும் ஊழியர் தக்கவைப்பு போன்றன அடங்கியுள்ளன. தமது ஊழியர்களை ஊக்குவித்து 'வெற்றி' என்பதற்கு முக்கியத்துவம் வழங்கும் நிறுவனம் எனும் வகையில் இந்த கௌரவிப்பு மற்றுமொரு பெறுமதி வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது.

ஊழியர்களின் கோரிக்கைகளை கண்காணிக்கும் செயன்முறைகளை யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியாக பின்பற்றி வருவதுடன் மனித மூலதனத்தையும் கண்காணித்த வண்ணமுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸில் காணப்படும் பிரத்தியேகமான உள்ளடக்கிய கலாசாரம் மற்றும் புத்தாக்கம் போன்றன எம்மை துறையில் முன்னிலையில் பேண உதவியாக அமைந்துள்ளன. இலங்கையில் கடந்த 30 ஆண்டு காலமாக பெருமளவு சாதனைகளை பதிவு செய்ய இது ஏதுவாக அமைந்திருந்தது. நிபுணத்துவம் மேம்படுத்தல் நிகழ்ச்சிகள் வினைத்திறன் அடிப்படையிலான பணியாற்றும் சூழல் மற்றும் தொழில்-வாழ்க்கை சமநிலை ஆகியன நிறுவனத்தினால் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதுடன் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக திகழச்செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ள காரணிகளாகும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுரேஷ் முத்தையா கருத்துத் தெரிவிக்கையில் 'யூனியன் அஷ்யூரன்ஸில் நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் ஊழியர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். திறந்த பாதுகாப்பான மற்றும் சகலதும் உள்ளடங்கிய பணியாற்றும் சூழலை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம். ஊழியர்கள் கட்டமைப்பில் நாம் காணும் மாற்றங்கள் மனித வளங்கள் பிரிவால் ஊழியர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு அவற்றை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதனூடாக நிறைவேறியுள்ளது. பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்கள் ஒரு நாளில் உருவாக்கப்படுவதில்லை. அதற்காக ஊழியர்களின் நம்பிக்கையை படிப்படியாக கட்டியெழுப்ப வேண்டும் தாம் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் மதிப்பை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கவும் வேண்டியிருக்கும். இதுவே பயணமாகும் தொடர்ச்சியாக புதிய விடயங்களை பயின்று அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது' என்றார்.