Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது

இலங்கையின் காப்புறுதித்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய வண்ணம் வரலாற்றில் முதல் தடவையாக வெளிநாடொன்றில் தனது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. ‘Success Beyond Borders’, எனும் தெளிவான இலக்குடன் இந்நிகழ்வு மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் அமைந்துள்ள இஸ்டானா ஹோட்டலில் ஜுன் 19ம் திகதி பி.ப. 4.30 மணி முதல் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சமாந்தரமாக கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் உள்நாட்டு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மலேசியாவில் நடைபெற்ற நிகழ்வு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வுடன் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முகாமைத்துவத்தின் உயரதிகாரிகள் மற்றும் விற்பனை செயலணியின் ஊழியர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். மேலும் யூனியன் அஷ்யூரன்ஸின் சகல சமூக ஊடக வலைத்தளங்களிலும் இந்நிகழ்வு காண்பிக்கப்பட்டிருந்தது. இதன் மூலமாக சகல வாடிக்கையாளர்கள் பங்காளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு மலேசியாவில் நடைபெற்ற நிகழ்வுடன் இணைந்து கொள்ள முடிந்தது.

இவ்வாறு நடைபெற்ற வருடாந்த விருதுகள் நிகழ்வானது நிறுவனத்தில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த ஊழியர்களுக்கு கௌரவிப்புகளையும் வெகுமதிகளையும் வழங்கும் வகையில் அமைந்திருந்தது. 33 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டிருந்ததுடன் மாபெரும் '‘Champion of Champions Award’' விருதை மாஹரகம கிளையைச் சேர்ந்த கெலும் ஜயசிங்க பெற்றுக்கொண்டார். யூனியன் அஷ்யூரன்ஸில் பணியாற்றும் காலப்பகுதியில் இரண்டாவது தடவையாக இவர் இந்த விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யூனியன் அஷ்யூரன்ஸின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகப்பிரிவின் பொது முகாமையாளர் தர்ஷன அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்ரூபவ் '30 வருட கால பயணத்தை யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்துள்ளது புதிய தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் செயற்பாடுகள் போன்றன துறையில் காணப்படும் மிகவும் புத்தாக்கமான நிறுவனங்களில் ஒன்றாகத்திகழச் செய்துள்ளன. நாம் நிறுவனம் எனும் வகையில் தொடர்ச்சியாக சிறப்பாக செயலாற்ற எம்மை அர்ப்பணித்துள்ளதுடன்ர இலங்கையில் காணப்படும் ‘benchmark Insurance Company’ காப்புறுதி நிறுவனமாக திகழச் செய்வதை நோக்காககொண்டு பயணித்த வண்ணமுள்ளோம். இதன் காரணமாகதான் 30 வருட வரலாற்றில் முதல் தடவையாக எமது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை மலேசியாவில் நாம் ஏற்பாடு செய்தோம். யூனியன் அஷ்யூரன்ஸ் விற்பனை செயலணியினருக்கு '‘Go Beyond Borders’ அனுபவத்தை பெற்றுக்கொடுத்திருந்தோம். இலங்கையின் காப்புறுதித்துறையில் இது போன்ற அனுபவம் வழங்கப்படும்முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்' என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 நிகழ்வு 'Success Beyond the Borders’. எனும் தொனிப்பொருளின் கொண்டாட்டத்துடன் நடைபெற்றது.



படம்:
‘Champion of Champions’ விருதை வென்ற கெலும் ஜயசிங்க காணப்படுகிறார்.