Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

நாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது

இந்த புத்தாண்டு காலத்தில் காப்புறுதி செய்யப்பட்ட அன்புக்குரியவர்களை பாதுகாத்திட உதவ யூனியன் அஷ்யூரன்ஸ் முன்வந்துள்ளது. 1987 முதல், காப்புறுதித்துறையில் புரட்சிகளை ஏற்படுத்தி வரும் இந்நிறுவனம், இலங்கையின் பல தலைமுறைகளின் எதிர்பார்ப்புகளை கடந்துள்ளது. 30 வருட காலமாக யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி மற்றும் முதலீட்டுத்தீர்வுகளை வழங்குவதுடன், நம்பிக்கையுடனான பாதுகாப்புக்கான தனது அர்ப்பணிப்பான பயணத்தை தொடர்ந்த வண்ணமுள்ளது.

நம்பிக்கை என்பதற்கான தனது அர்ப்பணிப்புக்கமைய, பங்காளர்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதல் வென்றுள்ளது. இலங்கையில் காப்புறுதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தனது சேவைகள் மற்றும் தீர்வுகளை தொடர்ச்சியாக மேம்படுத்தியுள்ளது. இலங்கையின் காப்புறுதி மற்றும் முதலீட்டுத் துறையில் யூனியன் அஷ்யூரன்ஸ் எவ்வாறு முன்னோடியாக தெரிவாகியிருந்தது என்பது இதனூடாக உறுதியாகிறது.

யூனியன் அஷ்யூரன்ஸ் விற்பனை மற்றும் விநியோக செயற்பாடுகளின் பொது முகாமையாளர் தர்ஷன அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 'முப்பது வருடங்கள் என்பது குறுகிய காலம் அல்ல. பல தடைகளை நாம் கடந்து வந்துள்ளதுடன், இலங்கையின் காப்புறுதிச் சந்தையில் பல வெற்றிகளையும் எய்தியுள்ளோம். எமது வெற்றியின் பிரதான அம்சமாக, எமது நாட்டுக்கும், சமூகங்களுக்கும் எமது வாழ்க்கைத்தரங்களுக்கும் பொருத்தமான பல தீர்வுகளை வடிவமைத்திருந்தமை அமைந்துள்ளது. அத்துடன், மிக முக்கியமாக, யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்கள் மற்றும் நிர்வாகம் என்பது எமது வெற்றிகரமான செயற்பாட்டுக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். எதிர்காலத்தில் சிறந்த இலக்குகளை எய்துவதற்கு முழு யூனியன் அஷ்யூரன்ஸ் குடும்பமும்தன்னை அர்ப்பணித்துள்ளது. வெற்றிக்கான இந்த பயணத்தில் எம்முடன் கைகோர்க்குமாறு நாம் அனைத்து இலங்கையர்களையும் அழைக்கிறோம்' என்றார்.

புதுவருடம் என்பது வாழ்க்கையில் நேர்த்தியான மாற்றங்களை ஏற்படுத்த கிடைத்த புதிய வாய்ப்பாகும். உங்கள் அன்புக்குரியவர்கள் மீது நீங்கள் எந்தளவு அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை காண்பிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே, இந்த புத்தாண்டில், உங்கள் அன்புக்குரியவர்கள்மீதுநீங்கள் காண்பிக்கும் கரிசனையை வெளிப்படுத்த, பெறுமதி வாய்ந்த காப்புறுதித் திட்டம் ஒன்றை யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து வழங்குங்கள். யூனியன் அஷ்யூரன்ஸ் நிதி ஆலோசகர்கள் ஏப்ரல் 1ம் திகதி முதல் 12ம் திகதி வரை நாடு முழுவதும் பயணிப்பதுடன், இலங்கையர்களுக்கு தமது எதிர்காலத்தை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள திட்டமிட அவசியமான ஆலோசனைகளை வழங்குவார்கள்.