Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது

வெவ்வேறு சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமத்தின் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ள சமூக பொறுப்புணர்வு வர்த்தக நாமமான 'யூனியன் மனிதாபிமானம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் சமூகங்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது.

யூனியன் மனிதாபிமானம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர், கம்பனி வெவ்வேறு சமூக மட்ட சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்திருந்தது. நாடு முழுவதிலும், வெவ்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாம்களின் மூலமாக, பெருமளவான அனுகூலம் பெறுவோரை சென்றடைவதை இலக்காகக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் அங்கமாக நீரிழிவு முகாம்கள் முன்னெடுக்கப்படும். டிசம்பர்மாதம் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் இந்த திட்டம் கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், குருநாகல், கண்டி, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை, ஏனைய சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், நாடு முழுவதிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகமும் இடம்பெறவுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் மூலமாக, பொது மக்கள் தம்மை தலசீமியா, டெங்கு மற்றும் நீரிழிவு ஆகிய கொடிய நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றிய முக்கிய விவரங்கள் வழங்கப்படும். தற்போது கம்பனியின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் நாடு முழுவதிலும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சமூகங்களை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி டர்க் பெரெய்ரா கருத்து தெரிவிக்கையில், 'எமது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு எமக்கு பாரியளவு வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, யூனியன் மனிதாபிமானம் எனும் பிரத்தியேகமான பெயர் மற்றும் வர்த்தகச் சின்னம் ஆகியவற்றின் அறிமுகத்துடன், எமது சேவைகளை மேலும் விஸ்தரிப்பது திட்டமாகும். இதன் மூலமாக, எமது நோக்கங்கள் மற்றும் இலக்குகள் போன்றன தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளன. எமது இறுதி இலக்குகளை எய்தும் வகையில், நாம் பாரியளவு முன்நோக்கிய படிகளை எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களத்தின் தலைமை வைத்தியர் அதிகாரி ருவன் விஜயமுனி கருத்து தெரிவிக்கையில், 'சமூகங்கள் விஸ்தரிக்கப்படும் நிலையில், பெருமளவு சிக்கல் நிலைகளும் ஏற்படுகின்றன. முன்னொரு போதும் இல்லாத வகையில் நோய்கள் மிகவும் வேகமாக பரவி வருவதை எம்மால் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. ஆனாலும், முறையான தகவல்கள் மூலமாக பெருமளவு இந்த நோய்களை தவிர்த்துக் கொள்ளலாம். யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் செயற்பாடுகளை நாம் பாராட்டுவதுடன், பொது மக்களுக்கு மிகவும் முக்கியமான தகவல்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.

'தலசீமியா நோயை தவிர்ப்பதற்கு சிறந்த வழிமுறை என்பது விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து எமக்கு இந்த விபரங்களை பரப்புவதற்கு சில காலமாக பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளது. யூனியன் மனிதாபிமானம் எனும் புதிய தொனிப பொருளின் கீழ், இந்த முயற்சிகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு, சமூகங்களில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்' என தேசிய தலசீமியா நிலையத்தின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர். நிலாம் தெரிவித்தார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் பிரிவின் இலக்கு என்பது, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவது என்பதுடன், அதற்காக தமது வாடிக்கையாளர்களுடன் பங்காண்மைகளை ஏற்படுத்தி வெளிப்படைத்தன்மை, மதிப்பு மற்றும் சௌகர்யம் ஆகியவற்றை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கம்பனி தொடர்ந்தும் நம்பிக்கை எனும் தனது உறுதிமொழிக்கமைவாக, எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்பும் வகையில் மேலும் பல நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்க தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த முயற்சிகள் யூனியன் மனிதாபிமானம் என்பதன் கீழ் மேலும் வலுவூட்டப்படும் என்பதுடன், சமூகத்துக்கான தனது பங்களிப்புடன் மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது.