Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்

இதுவரையில் இலங்கை மாபெரும் பிரச்சனையாக திகழும் டெங்கு நோயை, ஒழிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் தேசிய செயற்திட்டத்துக்கு தனது பங்களிப்பை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இலங்கையினுள் இவ்வாறானதொரு செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாக அமைந்துள்ளது.

இதன் கீழ் முன்னெடுக்கப்படும் முதலாவது டெங்கு ஒழிப்பு சமூக செயற்திட்டம் கிருலப்பனை சித்தார்த்தபுரம் பிரதேசத்தை மையமாக கொண்டு 2017 பெப்ரவரி 5ம் திகதி உத்தியோகபூர்வமான முறையில் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தது. இந்த செயற்திட்டம் கொழும்பு மாநகர சபையின் மக்கள் சுகாதார திணைக்களம் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் மேற்பார்வையின் கீழ் குறுங்கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. பிரதேசத்தின் குழந்தைகள் மற்றும் வயதுவந்தவர்கள் என சகலரும் அடங்கலாக டெங்கு ஒழிப்புக்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத ;துவது இந்த நிகழ்ச்சின் பிரதான இலக்காக அமைந்திருந்தது.

நிகழ்ச்சியின் கீழ் முன்னெடுக்கப்படும் மற்றுமொரு விசேட செயற்பாடாக சித்தார்தபுர பிரதேசத்தின் 5 வலயங்களை பூகோள மட்டத்தில் பிரித்து அந்த வலயங்களில் சிறுவர் சங்கங்களை ஏற்படுத்துவதாகும். இந்த சங்கங்களைச் சேர்ந்த குழந்தைகள், இந்த மாற்றத்துக்கான அடிப்படையாக திகழ்வார்கள். இதன்போது பெற்றுக்கொள்ளும் வெற்றிகளை பொறுத்து, அந்த சங்கங்களை கௌரவித்து பரிசுகளை விநியோகிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 – 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் சித்திரப் போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், அறிவு காண் போட்டிகள் மற்றும் நாடகங்கள் போன்றன முன்னெடுக்கப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடிப்படையாக, இந்த திட்டத்தை ஒரு வருடம் வரை முன்னெடுப்பதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் அடங்கலாக இந்த திட்டத்தில் கைகோர்த்துள்ள சகல தரப்பினரினதும் இலக்காக அமைந்துள்ளது. இந்த செயற்திட்டத்தை தொடர்ந்து, இப்பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மற்றுமொரு பிரதேசமொன்றை தெரிவுசெய்து அப்பிரதேசத்தில் சாதாரண டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். குறித்த செயற்திட்டம் நிறைவில் இரு வலயங்களின் சாதனைகளை கவனத்தில் கொண்டு அந்த திட்டங்களின் வெற்றியை கௌரவிப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் செயற்பாட்டுக் கழகம் பிரிவு 4 சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அந்த செயற்குழுவினர், சமூக அபிவிருத்தி சங்க தலைவர்கள், குழந்தை சங்க தலைவர்கள், பெண்கள் கூட்டுறவு பிரதேச தலைவிகள், பிரதேச சமூக தலைவர், கிருலப்பனை சூழல் பொலிஸ் அதிகாரிகள், பிரதான சுகாதார கல்வி அதிகாரிகள், யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் சுகாதார பிரச்சார அமைப்பின் அங்கத்தவர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சித்திட்டம் பற்றி யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம்) தர்ஷன அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ' இதுபோன்ற முன்னோடியான செயற்திட்டத்துக்கு பங்களிப்பு வழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நீண்ட காலமாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மற்றும் வெ வ்வேறு தரப்பினருக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளது. இதை நாம் பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கும் கடமையாக கருதுகிறோம். என்றும் ஆரோக்கியமாக சமூகத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. எதிர்காலத்திலும் இதுபோன்ற செயற்திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்குவதன் மூலமாக நாட்டுக்கு மேலும் ஆரோக்கியமான நாளையை உருவாக்குவது எமது எதிர்பார்ப்பாகும்' என்றார்.

கொழும்பு மாநகர சபையின் மக ;கள் சுகாதார திணைக்களத்தின் பிரதான வைத்திய அதிகாரி ஆர்.எல்.டி.எஸ்.விஜயமுனி கருத்துத் தெரிவிக்கையில், ' டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், மக்கள் மத்தியில் அது தொடர்பான மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. அந்த வகையில், குறித்த செயற்திட்டமொன்றின் மூலமாக எமக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்த வேண்டிய மாற்றத்தின் முக்கியத்துவம் எமக்கு தெளிவாக காணப்படுகிறது. அந்த வகையில், விசேட செயற்திட்டமொன்றை முதல் தடவையாக நாட்டினுள் முன்னெடுப்பதற்காக பங்களிப்பை வழங்குகின்றமைக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளதையிட்டு நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் நீண்ட காலமாக எமக்கு இதுபோன்ற செயற்பாடுகளுக்கு பங்களிப்பை வழங்குகிறது. எதிர்காலத்திலும் அந்த பங்களிப்பு எமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்' என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் அடிப்படை விடயங்களாக தனது வாடிக்கையாளர்களுடன் ஒழுக்கம், கௌரவம் மற்றும் சௌகரியம் போன்ற குணஅம்சங்களுடன் சேவைகளை பெற்றுக்கொடுப்பது அமைந்துள்ளது. ' யூனியன் மனிதாபிமானம்' என்பதனூடாக சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு நிறுவனம் மேற்கொள்ளும் முயற்சி இந்த குணாதிசயங்களில் உள்ளடங்கியுள்ளன. எதிர்காலத்திலும் இது போன்ற ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு பல நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதுடன், ' நம்பிக்கை' எனும் உறுதி மொழிக்கமைய சேவைகளை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளது.