Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

ACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி

ACCA 2016ம் நிலைபேறான விருதுகள் வழங்கும் நிகழ்வில், நிதிச்சேவைகள் மற்றும் காப்புறுதிப்பிரிவில் வெற்றியாளராக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியான 9வது ஆண்டாக யூனியன் அஷ்யூரன்ஸ் இந்த விருதை தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2017 பெப்ரவரி 28ம் திகதி இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

உறுதியான உறவுகளைப் பேணுவது மற்றும் பங்காளர்களுக்கு பெறுமதி சேர்ப்பது என்பன நிறுவனத்தின் நீண்ட கால வெற்றிகரமான செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததென்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு தீர்வுகளை, ஒப்பற்ற சேவைத்தரத்துடன் வழங்குவது, ஊழியர் மேம்பாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது மற்றும் தொழில்நிலையில் முன்னேற்றம், வியாபார பங்காளர்களுடன் உறுதியான உறவுகளை கட்டியெழுப்புவது, சமூகத்தின் நலனில் பங்களிப்பு வழங்குவது மற்றும் சூழலில் நிறுவனம் தாக்கம் ஏற்படுத்துவதை குறைப்பது போன்றன யூனியன் அஷ்யூரன்ஸை பொறுத்தமட்டில் பிரதான நிலைபேறான அம்சங்களாக அமைந்துள்ளன.

யூனியன் அஷ்யூரன்ஸ் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டர்க் பெரெய்ரா கருத ;துத் தெரிவிக்கையில், 'இதுபோன்ற பெருமைக்குரிய நிறுவனத்திடமிருந்து தொடர்ச்சியாக இதுபோன்ற கௌரவிப்பை பெறுவது என்பது மாபெரும் வரப்பிரசாதமாகும். நிலைபேறான வகையில் வியாபார இலக்குகளை நிலைபேறான வழிமுறையில் எய்துவதற்கு இந்த விருது ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது' என்றார்.

நம்பிக்கை எனும் உறுதி மொழிக்கமைய யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது, இந்த உறுதி மொழிக்கமைய வெளிப்படையான, சௌகரியமான மற்றும் மதிப்புடன் சகல பங்காளர்களுடனும் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்த வண்ணமுள்ளது.