Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்

தாம் இயங்கும் சமூகம் தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தும் யூனியன் மனிதாபிமானம், எனும் யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமம், சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் நலன் ஆகியவற்றை பரப்புவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. 2016 நிறைவடைந்ததை தொடர்ந்து, யூனியன் மனிதாபிமானம் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் என்பது, சமூகத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்தது.

2016 வருட காலப்பகுதியில், கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகிய தரப்பினரின் உதவியுடன் மொத்தமாக 57 டெங்கு விழிப்புண்வு செயற்திட்டங்களையும், 60க்கும் அதிகமான தலசீமியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், 14 நீரிழிவு தடுப்பு நிகழ்ச்சிகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது.

டெங்கு நோயிலிருந்து சமூகத்தை விடுவிப்பது தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் கவனம் செலுத்தி வருவதுடன், நாடு முழுவதையும் அடிப்படையாகக் கொண்டு, டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டமொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது. வீடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு, டெங்கு ஒழிப்பு சிரமதான செயற்பாடுகள் மற்றும் கையேடுகள் விநியோகம் போன்றன நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மொத்தமாக 55 டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள் ஒரே நாளில்முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும், நாடு முழுவதிலும் நீரிழிவு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிகளின் போது, இனங்காணல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நீரிழிவால் பாதிக்கப்படக்கூடிய நிலையிலிருந்த நோயாளர்களுக்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன.

மேலும், பாரதூரமான குருதியுடன் தொடர்புடைய குறைபாடு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது. தலசீமியா விழிப்புணர்வு மற்றும் தவிர்ப்பு தொடர்பான செயற்திட்டங்கள் சமூகங்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த திட்டத்தின் மூலமாக, குருதி நோய் பரவுவது தவிர்க்கப்படுவதுடன், போதியளவு அறிவின்மை காரணமாக சமூகங்களில் ஏற்படக்கூடிய பாரதூரமான தாக்கங்களை தவிர்த்துக்கொள்ள ஏதுவாக அமைந்திருந்தது.

இந்த செயற்பாடுகள் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், '2016ம் ஆண்டில் நாம் முன்னெடுத்திருந்த எமது சமூகப்பொறுப்புணர்வு செயற்பாடுகள் மூலமாக கிடைத்துள்ள பெறுபேறுகளையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஆனாலும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய மேலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக எமது யூனியன் மனிதாபிமானம் வர்த்தக நாமத்தினூடாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. எனவே, சமூக ஈடுபாட்டை மேம்படுத்த நாம் தொடர்ந்தும் பல சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்' என்றார்.

கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார திணைக்களத்தின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர். ருவன் விஜயமுனி கருத்துத் தெரிவிக்கையில், 'யூனியன் அஷ்யூரன்ஸ் அதன் யூனியன் மனிதாபிமானம் எனும் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத ;தினூடாக சமூகத்துக்கு பெருமளவு பங்களிப்பை மேற்கொண்ட வண்ணமுள்ளது. இந்த திட்டத்தினூடாக, நாட்டின் பெருமளவான சமூகத்துக்கு யூனியன் அஷ்யூரன்ஸினால் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளேன்' என்றார்.

குருநாகல் தேசிய தலசீமியா நிலையத்தின் குழந்தைகள் சிகிச்சை நிபுணர் வைத்தியர். ஜே.எம்.நிலாம் கருத்துத் தெரிவிக்கையில், 'தலசீமியா நோய்க்கெதிராக போராடுவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் நீண்ட காலமாக பங்களிப்பு வழங்கி வருகிறது. இந்த செயற்பாடுகள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது சொற்களில் அடக்கிவிட முடியாது. அவர்களுக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்காலத்திலும் அவர்களின் அளப்பரிய பங்களிப்பை எமக்கு வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்' என்றார்.

வெளிப்படைத்தன்மை, மதிப்பு மற்றும் சௌகரியம ; ஆகியவற்றின் அடிப ;படையில் வாடிக்கையாளர்களுடன் உறுதியான பங்காண்மைகளை மேம்படுத்தி வருவதுடன், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதிலும் யூனியன் அஷ்யூரன்ஸ் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. நம்பிக்கை எனும் உறுதி மொழிக்கமைய தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிறுவனம், ஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்பும் வகையிலமைந்த நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளது. யூனியன் மனிதாபிமானம் எனும் நாமத்தின் கீழ் இந்த செயற்பாடுகளுக்கு மேலும் வலுச்சேர்க்கப்பட்டுள்ளது.