Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

தேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு

இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 ல், சிறந்த வியாபார செயன்முறைகளை பின்பற்றியிருந்தமைக்காக 6 விருதுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது.

பிரிவுகள் விருதுகளை பொறுத்தமட்டில், காப்புறுதித்துறையில் வெற்றியாளராக நிறுவனம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. கூட்டாண்மை மேலாண்மை செயற்பாடுகளுக்காக 1ம் இடத்தை பெற்றிருந்தது. வியாபாரச் சிறப்புகள் மற்றும் நிதிப்பெறுபேறுகளுக்காக இரண்டாமிடத்தை சுவீகரித்திருந்தது. திறன் கட்டியெழுப்பலுக்காக மெரிட் விருதையும் தனதாக்கியிருந்தது.

மேலும், மிகப்பெரிய வியாபார பிரிவில், யூனியன் அஷ்யூரன்ஸ் இரண்டாமிடத்தை சுவீகரித்திருந்ததுடன், தேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் வழங்கலில் வெள்ளி விருதையும் தனதாக்கியிருந்தது.

இந்த விருதுகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், 'எமது வியாபாரத்தில் வௌ;வேறு பிரிவுகளில் தொடர்ச்சியாக விருதுகளை பெற்றுக்கொள்கின்றமை என்பது மாபெரும் கௌரவமாக அமைந்துள்ளது. இந்த விருதுகளின் மூலமாக, யூனியன் அஷ்யூரன்ஸின் வர்த்தக நாம நிலையான 'நம்பிக்கை' என்பது 'சௌகரியம்' என்பதுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் எமது வியாபாரச் செயற்பாடுகளில் நாம் வெளிப்படையாக உள்ளதுடன், பங்குதாரர்களுடன் நன்மதிப்புடனான செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறோம்' என்றார்.

25 வருட காலத்துக்கு மேலாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் யூனியன் அஷ்யூரன்ஸ், புத்தாக்கம், வலிமை ஆகியவற்றை இலங்கையின் காப்புறுதித்துறையில் பேணி வருகிறது. 140க்கும் அதிகமான கிளைகள், 4500க்கு அதிகமான கள விற்பனை அதிகாரிகள் ஆகியவற்றை நாடு முழுவதிலும் கொண்டுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் இதர பங்காளர்கள் ஆகியோர் நேரடி அனுகூலம் பெறுவோராக அமைந்துள்ளதுடன், நிறுவனத்தின் சிறந்த சென்றடைவ, நிறுவனத்தின் நிலையான தன்மை மற்றும் சிறந்த வியாபார செயற்பாடுகள் போன்றவற்றையும் கொண்டுள்ளது.