Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015 இல் டயமன்ட் விருதை தனதாக்கியிருந்த யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி

இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகத்தின் மூலமாக தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015 கடந்த நவம்பர் 26ஆம் திகதி கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக தங்க விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி சுவீகரித்திருந்தது. இலங்கையில் காணப்படும் முன்னணி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் மக்கள் அபிவிருத்தி செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. மேலும், தங்க விருதை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பெற்றுக்கொண்டமைக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சிக்கும் மற்றுமொரு நிறுவனத்துக்கும் டயமன்ட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. SLITAD இனால் வழங்கப்படும் அதியுயர் விருதாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி யின் மனித வளங்கள் மற்றும் பயிலல் மற்றும் அபிவிருத்தி பிரிவுகளின் மூலமாக முன்னெடுக்கப்படும் மக்கள் அபிவிருத்தி செயற்பாடுகள் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளமை இதன் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.

அரச, தொழிற்துறை மற்றும் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை ஒன்றிணைத்து இலங்கையில் மனித வளங்கள் அபிவிருத்தி செயலணி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை ஊக்குவிப்பதை தனது பிரதான இலக்காக இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகம் கொண்டுள்ளது.

பின்வரும் பத்து தெரிவு அம்சங்களுக்கு அப்பால் புள்ளிகளை பெற்றிருந்த நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. வணிக கொள்கை, பயிலல் மற்றும் அபிவிருத்தி கொள்கை, மக்கள் நிர்வாக கொள்கை, தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ கொள்கை, முகாமைத்துவத்தின் வினைத்திறன், கௌரவிப்புகளும் விருதுகளும், ஈடுபாடு மற்றும் வலுவூட்டல், பயிலல் மற்றும் அபிவிருத்தி, வினைத்திறன் அளவீடு மற்றும் தொடர்ச்சியான மேம்படுத்தல்கள்.

நாட்டின் நம்பிக்கையை வென்ற காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் (UA), 27 வருடங்களுக்கு மேலான உறுதியான மற்றும் தொடர்ச்சியான செயற்பாட்டுச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. 110 கிளைகளில் 4500க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் கள அதிகாரிகளைக் கொண்டு, நாடு முழுவதையும் சேர்ந்த பல மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.