Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

கனடா, வன்கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு

இலங்கையின் காப்புறுதி துறையில் புத்தமைவை பதித்து வரும் யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த துறையில் வழங்கி வரும் சிறந்த பங்களிப்பை கௌரவிக்கும் முகமாக, கனடாவின் வன்கூவர் நகரில் நடைபெற்ற மில்லியன் டொலர் வட்ட மேசை மாநாட்டில் (ஆனுசுவு) பங்குபற்றுவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறப்பாக செயலாற்றும் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

1927 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மில்லியன் டொலர் வட்ட மேசை மாநாடு, நிதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் முன்னணி சம்மேளனமாக திகழ்கிறது. மேலும், 67நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் 43,000க்கும் அதிகமான முன்னணி காப்புறுதி மற்றும் நிதிச்சேவைகளை வழங்கும் அதிகாரிகளின் சர்வதேச, சுயாதீன சம்மேளனமாகவும் திகழ்கிறது. ஆனுசுவு அங்கத்தவர்கள் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த அறிவை கொண்டிருப்பதுடன், நன்நெறி சார்ந்த செயற்பாட்டையும் கொண்டுள்ளனர். மேலும் சிறந்த வாடிக்கையாளர் சேவைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனுசுவு அங்கத்துவம் என்பது சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆயுள் காப்புறுதி மற்றும் நிதிச் சேவைகள் வியாபாரத்தில் நியமங்களையும் கொண்டுள்ளது.

ஆனுசுவு இல் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது, துறையில் மிகவும் உயர்ந்த நிலையாக கருதப்படுகிறது. இந்த உயர்ந்த ஸ்தானத்தை பெற்றுக் கொள்வதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, தொடர்ச்சியாக இந்நிறுவனம் துறையில் ஏற்படுத்தி வரும் புத்தமைவான செயற்பாடுகளாகும். கம்பனி தொடர்ந்தும் சிறந்த ஊழியர்களை பணிக்கமர்த்துவதுடன், அவர்களுக்கு தமது தொழில் நிலையில் சிறப்பாக செயலாற்றுவதற்கு அவசியமான சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சிகளையும் அவசியமான உதவிகளையும் வழங்கி வருகிறது.

யூனியன் அஷ்யூரன்ஸ் ஸ்தாபனத்தை இந்த ஆண்டு பிரதிநிதித்துவப்படுத்தியோரில், வி.ஜி.கே.எஸ். ஜயசிங்க(Court of the Table)இ எச்.டி.ஜே.சி. அப்புஹாமி(Court of the Table & Life Member),டி.தினேஷ், பி.எஸ்எம்.ஆர்.ஏ.எல்.யு.கே. சேனநாயக்க, ஏ.ஜென்சி, ஜி.யு.எஸ். சில்வா (Life Member) திருமதி. ஏச்.டபிள்யு.என். சோமபால, டபிள்யு.கே.ஐ.பி. பெர்ணாண்டோ, கே.கேதீசன், ஜே.எம். பெர்ணாண்டோ, பி.கே. ஜனித ரோஹண, எச்.ஜி.எம்.கிம்ஹான், எஸ்.சுப்ரமணியம், டி.ம்.டி.பி. ஜயசிங்க, எம்.ஏ.பி.சில்வா, பி.டபிள்யு.ஆர்.ஏ.பி. ரணதுங்க, ஏ.அரசரட்னம், ஏ.விஜயகுமார், டபிள்யு.எம்.எச்.சி.பெர்னான்டோ, எம்.மகாலிங்கம், எச்.வி.பி.தர்ஷன, ஆர்.எம்.ஏ.எஸ். ரணதுங்க, ஆர்.எம்.எஸ்.பி.பண்டார, ஐ.டபிள்யு.ஜி.எஸ்.கே. பத்மசிறி, எஸ்.எஸ்.கன்னா, ஏ.வனஜா மற்றும் என்.சோபிதா ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

யூனியன் அஷ்யூரன்ஸை சேர்ந்த பிரதிநிதிகளும், வன்கூவர் நகருக்கு, கம்பனி அனுசரணையில் பயணமாகியிருந்தனர். இவர்கள் 2016 ஜுன் 12 – 16 வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற MDRT வருடாந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.

இலங்கையிலும், பிராந்தியத்திலும் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக திகழ்வது என்பதற்கமைய யூனியன் அஷ்யூரன்ஸ் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கம்பனி முழுவதுக்குமான பரந்தளவு பயிலக் கூடிய கலாசாரத்தை ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் பெருமளவானோர் நாடும், காப்புறுதி தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக திகழும் நோக்கத்தை கொண்டுள்ளது. 28 வருடங்களை பூர்த்தி செய்வதுடன், கம்பனியின செயற்பாடுகளை உறுதியான ஊழியர் செயற்குழு, வலிமையான மூலதன இருப்பு, மற்றும் மீள் உறுதி செய்யப்பட்ட காப்புறுதிதாரர்களுடனான பங்காண்மைகள் போன்றன வலிமைப்படுத்தியுள்ளன. 'நம்பிக்கை' எனும் உறுதி மொழிக்கமைவாக, வெளிப்படையாகவும், வசதியாகவும் மற்றும் மதிப்புடன் சகல பங்காளர்களுக்கும் கடந்த 28 வருட காலமாக யூனியன் அஷ்யூரன்ஸ், சேவைகளை வழங்கி வருகிறது.