Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு

2016 மார்ச் 31ஆம ; திகதியுடன் நிறைவடைந்த மூன்று மாத காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ், மொத்த வழங்கிய தவணைக்கட்டணத் தொகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 23 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கம்பனி வரிக்குப் பின்னரான இலாபமாக 61 மில்லியன் ரூபாவை பதிவு செய்துள்ளது, இது 2015 இன் இதே காலப்பகுதியில் 1.4 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. ஆயுள் தவிர்ந்த பிரிவின் 78 சதவீதமான உரிமையாண்மையை பிரித்து வழங்கியிருந்தமை மூலமாக பெற்றுக் கொண்ட பணத்தை முதலீடு செய்திருந்ததன் மூலம் பெற்றுக் கொண்ட மேலதிக வட்டி வருமானம் என்பது 2015 இன் முதல் காலாண்டில் வரிக்கு பின்னரான இலாபம் அதிகரிப்பதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தது.

2016 மார்ச் 31ஆம் திகதியன்று, யூனியன் அஷ்யூரன்ஸின் ஆயுள் நிதியம் என்பது 27 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. ஆரோக்கியமான திரட்சி விகிதத்தையும், உறுதியான வியாபார நிதி ஸ்திரத்தன்மையையும் கொண்டுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் தனது 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்' திட்டத ;தை அறிமுகம் செய்திருந்தது, இது வைத்தியசாலை அனுமதி மற்றும் சுகாதார பராமரிப்பு செலவீனங்களை காப்புறுதிதாரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த தீர்வின் மூலமாக பல்வேறு விசேட அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் 'மீளமைப்பு அனுகூலம்' அமைந்துள்ளதுடன், காப்புறுதிதாரர்கள் தமக்குரிய 100 சதவீத ஒதுக்கத்தை பயன்படுத்தியிருந்தாலும், வைத்தியசாலை அனுமதி அல்லது சிகிச்சை ஏற்கனவே பெற்றுக் கொண்ட சுகயீனத்துக்காக இல்லாவிடின் நஷ்டஈட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் காணப்படும் மற்றுமொரு விசேட அம்சமாக 'ழெ உடயiஅ டிழரௌ' அமைந்துள்ளது. இதன் போது குறித்த ஆண்டொன்றில் நஷ்டஈடு எதுவும் கோரப்படாத நிலையில், அடுத்து ஆண்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய ஆகக்கூடிய வருடாந்த அனுகூலத் தொகை என்பது 25 சதவீதத்தால் அதிகரிக்கப்படும். இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய அனுகூலமும் காணப்படுகிறது.

யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி நிறுவனம் 'நம்பிக்கை| எனும் தனது உறுதி மொழிக்கமைய தமது வாடிக்கையாளர்களுடன் வசதியான முறையிலும், வெளிப்படையாகவும், கௌரவமான முறையிலும் சேவைகளை வழங்கி வருகிறது. எப்போதும், புத்தாக்கமான முறையில், பிரசார மற்றும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை இந்த இலக்கை எய்தும் நோக்கில் முன்னெடுத்து வருகிறது.