Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015

தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரி, பணிப்பாளர் சபை, உயர் முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோருடன் ஊழியர்கள் மற்றும் விற்பனை அதிகாரிகளும் இணைந்து சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் ஜுன் 8ஆம் திகதி வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

உறுதியான மற்றும் தொடர்ச்சியான பெறுபேறுகள் போன்றன நிறுவனத்தின் நீண்ட கால இலக்குகளை எய்துவதற்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. சந்தையில் முன்னோடியாக திகழ்வது எனும் இலக்குடன், யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியாக வளர்ச்சியை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த இலக்கை எய்துவதற்கு, நாம் அர்ப்பணிப்புடனும், எமது பயணத்தில் சிறந்த சிறப்பாகவும ; செயலாற்ற வேண்டியுள்ளது. 2015 என்பது யூனியன் அஷ்யூரன்ஸைப் பொறுத்தமட்டில் வெற்றிகரமான ஆண்டாக அமைந்திருந்ததுடன், ஆண்டு முழுவதும் அணியின் அர்ப்பணிப்பான செயற்பாடு என்பது இதற்கு ஒரே காரணமாக அமைந்துள்ளது. துறையில் காணப்படும் சிறந்த அணியை நாம் கொண்டுள்ளோம் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை என்பதுடன், இவர்களின் செயற்பாடுகள் காரணமாக நாம் இன்றைய நிலையை எய்தியுள்ளோம். இதன் காரணமாக, இந்த ஆண்டின் வருடாந்த விருதுகளின் தொனிப்பொருளாக 'வுhந ஆளைளழைn கழச நுஒஉநடடநnஉந' என்பது அமைந்துள்ளது. நிறுவனத்தின் காண்பிக்கும் அர்ப்பணிப்பை நாம் வரவேற்கிறோம்.

நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றியிருந்த நபர்களுக்கு கௌரவிப்புகளுடன் விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன. சம்பியன் ஒஃப் சம்பியன்ஸ் எனும் மிகச் சிறந்த விருதை ஏழாவது தடவையாக சானக அப்புஹாமி வென்றிருந்தார். 2008 ஆம் ஆண்டு முதல் அவர் இந்த விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக பிரிவின் பொது முகாமையாளர் ருக்மன் வீரரத்ன கருத்து தெரிவிக்கையில், 'யூனியன் அஷ்யூரன்ஸில் எமது இலக்கு என்பது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சகல பங்காளர்களுடனும் எமது வளர்ச்சியை பகிர்ந்து கொள்வதாகும். என்பதன் ஊடாக இலங்கையில் காணப்படும் ஆயுள் காப்புறுதியில் தனித்துவமான நாமமாக திகழச் செய்வது எமது நோக்கமாகும். சாதனையாளர் எனும் வகையில் நீங்கள் பெற்றுள்ள வெற்றிகள் தொடர்பில் நாம் பெருமையடைகிறோம ;. உங்கள் பங்களிப்புக்கு நன்றி' என்றார்.

வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு என்பது ஒன்றுகூடியிருந்தவர்களை ஆழ்த்தும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றிருந்தன.