Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

ACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் கௌரவிப்பு

பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சம்மேளனத்தின் (ACCA) மூலம் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2014 இல், யூனியன் அஷ்யூரன்ஸ் கௌரவிக்கப்பட்டிருந்தது.

இந்த பெருமைக்குரிய விருதுகள் வழங்கல் நிகழ்வின் போது நிதி சேவைகள் மற்றும் காப்புறுதி துறையில் யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றியாளராக தெரிவாகியிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை தொடர்ச்சியாக 12ஆவது வருடமாக பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சம்மேளனத்தின் (ACCA) ஏற்பாடு செய்திருந்தது. சிறந்த நிலையான வணிக செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் எட்டாவது தடவையாக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

சகல பங்காளர்களுடனும் இடைவிடாத உறவு முறையை யூனியன் அஷ்யூரன்ஸ் பேணி வருவது என்பது கம்பனியின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது என யூனியன் அஷ்யூரன்ஸ் நம்புகிறது. எமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற பரந்த தீர்வுகளை வழங்குவதன் மூலமும், ஊழியர்களின் அபிவிருத்தி செயற்பாடுகளில் முதலீடுகளை மேற்கொள்வது மற்றும் நிபுணத்துவம், எமது வியாபார பங்காளர்களுடன் உறுதியான உறவுகள், சமூகத்தின் சிறப்பான செயற்பாட்டுக்கு பங்களிப்பை வழங்குவது மற்றும் சூழலில் கம்பனியின் தாக்கத்தை தணிப்பது போன்றன யூனியன் அஷ்யூரன்ஸை பொறுத்தமட்டில் நிலையாண்மை தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக அமைந்துள்ளன.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டர்க் பெரெய்ரா கருத்து தெரிவிக்கையில், 'எமது நிலையாண்மை செயற்பாடுகளுக்கு ACCA போன்ற பெருமைக்குரிய நிறுவனத்தின் மூலம் தொடர்ச்சியான கௌரவிப்பை பெறுவது என்பது பெருமைக்குரிய விடயமாகும். இந்த கௌரவிப்பு என்பதன் மூலமாக, எமது அணியினர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி, நிலையாண்மை வினைத்திறன் வாய்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து அதன் மூலம் எமது பங்காளர்களுக்கு பெறுமதி சேர்க்கக்கூடியதாக இருக்கும்' என்றார்.

சிறந்த மேலாண்மை, பொறுப்புத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்காக இலங்கை பட்டய கணக்காளர் கல்வியகத்திடமிருந்து (ICASL) மற்றும் தெற்காசிய கணக்காளர்கள் சம்மேளனம் (SAFA) ஆகியவற்றிடமிருந்து பல விருதுகளை கடந்த காலத்தில் யூனியன் அஷ்யூரன்ஸ் வென்றிருந்தது. GPTW கல்வியகத்தின் மூலமாக தொழில் புரிய சிறந்த நிறுவனமாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஊழியர் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றமைக்காக தங்க விருதை இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகத்திடமிருந்து (SLITD) பெற்றிருந்தது.

இந்த சகல விருதுகளும் யூனியன் அஷ்யூரன்ஸின் வர்த்தக நாம நிலையான 'நம்பிக்கை' என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு 'வசதி' வியாபார கொடுக்கல் வாங்கல்களில் 'வெளிப்படைத்தன்மை' மற்றும் சகல பங்காளர்களையும் மதிப்புடன் நடந்து கொள்ளல் போன்றன இதற்காக முன்னெடுக்கப்படுகின்றது.