Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'
முழுக்குடும்பத்தையும் உள்வாங்கி பாதுகாக்கும் விசேட காப்புறுதித்திட்டம்

இலங்கையின் காப்புறுதித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக புத்தாக்கமான மற்றும் ஆக்கபூர்வமான தீர்வுகளை அறிமுகம் செய்து வரும் யூனியன் அஷ்யூரன்ஸ், முழுக் குடும்பத்துக்குமான 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. காப்புறுதிதாரர் மற்றும் தங்கியிருப்போர் என அனைவரையும் உள்வாங்கி காப்புறுதித் தீர்வுகளை வழங்கும் இந்த திட்டம் இலங்கையில் மிகவும் மாறுபட்ட தீர்வாக அமைந்துள்ளது. யூனியன் லைஃவ் அட்வான்டேஜ் காப்புறுதித் திட்டத்தின் மேலதிக உள்ளடக்கமாகஇந்த யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் திட்டத்தை கொண்டிருக்க முடியும்.

விபத்துக்கள் மற்றும் திடீர் சுகயீனங்கள் ஆகியன தினசரி வாழ்க்கையில் தவிர்க்கப்பட முடியாதவை. இந்த சந்தர்ப்பத்தில் நபர் ஒருவர் எதிர்கொள்ளும் உணர்வு ரீதியான தாக்கத்துக்கு மேலதிகமாக நிதி ரீதியாகவும் பெருமளவு சவாலை எதிர்கொள்ள நேரிடும். நிதி ரீதியில் ஏற்படும் சிக்கல்களின் போது, தவிர்க்க முடியாத சவால்களை எதிர்கொள்ள தயாராக இருத்தல் வேண்டும். யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் திட்டத்தின் முக்கிய நோக்கம் வாழ்க்கையின் சவாலான நிலைகளில் உறுதுணையாக அமைவதாகும்.

யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் காப்பீடு என்பது, காப்புறுதிதாரர் மற்றும் அவரின் குடும்ப அங்கத்தவர் ஆகியோருக்கு வைத்தியசாலை அனுமதி மற்றும் சுகாதார பராமரிப்பு செலவீனங்கள் ஆகியவற்றை மீளளிக்கும் வகையில் அமைந்துள்ளது. காப்புறுதிதாரருக்கு '‘Cashless Card’ ஐயும் இந்த திட்டம் வழங்கும். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது, அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, குறித்த சேவையை செயற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சேவை செயற்படுத்தப்பட்டதும், ஏற்புடைய தொகையை யூனியன் அஷ்யூரன்ஸ் வைத்தியசாலைக்கு நேரடியாக செலுத்தும்.

யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் மூலமாக, 'மீட்பு அனுகூலம்' முதல் தடவையாக இலங்கையின் சுகாதார காப்புறுதி துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காப்புறுதிதாரருக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய தொகை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தாலும், மீண்டும் நஷ்டஈட்டுக் கோரிக்கையை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. காப்புறுதிதாருக்கு ஏற்புடைய காப்பீட்டுத் தொகையின் 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டிருந்தால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது முன்னர் அனுமதிக்கப்பட்ட காரணங்கள் தவிர்ந்து பிரிதொரு காரணமாக இருந்தால் குறித்த நஷ்டஈடு கம்பனியால் வழங்கப்படும்.

ஒரு காப்புறுதி ஆண்டினுள் எவ்வித நஷ்ட ஈடுகளும் கோரப்படாதவிடத்து, அடுத்து வரும் ஆண்டுக்கான ஆகக்கூடிய வருடாந்த அனுகூலங்கள் எல்லைப் பெறுமதி 25 சதவீதத்தால் அதிகரிக்கும். இந்த காப்புறுதித்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் மற்றுமொரு விசேட அனுகூலமாக, '‘No-Claim Bonus’' அமைந்துள்ளது.

யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் திட்டத்தின் ஊடாக, காப்பீடு செய்யப்பட்ட தொகை 2 மில்லியன் ரூபாயாக இருந்தால், காப்புறுதிதாரருக்கு வெளிநாடுகளில் பெற்றுக் கொள்ளும் சிகிச்சைகளுக்கான நஷ்டஈடுகளை கோர முடியும். இதில் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகள் உள்ளடங்கியுள்ளன. நவீன வாழ்க்கை முறையில் காணப்படும் சிக்கல் நிலைகள் காரணமாக, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. வேலைப்பளு நிறைந்த வாழ்க்கையில், எம்மில் பலர் எம்மை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் என்பது சிறந்த தெரிவாக அமைந்துள்ளதுடன், இலகுவில் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. சிறந்த அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் பற்றி மேலும் அறிந்து கொள்ள, காப்புறுதி ஆலோசகர் அல்லது எமது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமான 0112 990 900 உடன் தொடர்பு கொள்ளவும். மாறாக, நீங்கள் நாடு முழுவதும் பரந்து காணப்படும், எமது யூனியன் அஷ்யூரன்ஸ் எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்யலாம்.