Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

முதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு

உறுதியான மற்றும் தங்கியிருக்கக்கூடிய தீர்வுகளை பெருமளவான இலங்கையர்கள் மற்றும் குடும்பங்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்து வழங்கி வருகிறது. சேவைச் சிறப்பு, பொருட்கள் சிறப்பு மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் இலங்கையின் காப்புறுதி துறையில் உயர்வான நிலையை பேணி வருகிறது.

2016 இன் முதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு சேவைகளில் தொடர்ந்தும் தனது உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தது. கம்பனியின் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு திட்டம் தொடர்ச்சியாக தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், தலசீமியா விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு செயற்பாடுகளையும் அறிமுகம்செய்திருந்தது.

தலசீமியா என்பது குருதி தொடர்புடைய குறைபாடாகும், குருதிச் சுற்றோட்டத்தில் ஹீமோகுளோபின் விருத்தியை தடைசெய்யும் வகையில் அமைந்திருக்கும். இந்த குறைபாட்டை கொண்ட இருபாலாரும் திருமணம் செய்து கொள்வதன் மூலமாக இந்த நிலை ஏற்படுகிறது. இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், ஆரம்ப கட்டத்திலேயே இனங்காண்பதன் மூலம் இந்த நிலையை தவிர்த்துக் கொள்ள முடியும்.

முதல் காலாண்டில் முன்னெடுக்கப்பட்ட யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில் 20 நிகழ்வுகள் உள்ளடங்கியிருந்தன. இவை மொத்தமாக 4190 மக்களை சென்றடைந்திருந்தது, இதில் 10 நிகழ்வுகள் ஆசிரியர்களுக்காகவும், 8 நிகழ்வுகள் பெற்றோருக்காகவும், 2 நிகழ்வுகள் மாணவர்களுக்காகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மேலும் பொது மக்களுக்காக ஒரு நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தேசிய தலசீமியா நிலையத்தின் குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் நிலாம் கருத்து தெரிவிக்கையில், 'இளம் பராயத்தினருக்கு இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தலை ஏற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். போதியளவு அறிவின்மை காரணமாக தம்மையும், ஏனையவர்களையும் ஆபத்தில் தள்ளிவிடக்கூடும்.2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பதிவாகும் தலசீமியா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக இயங்குகின்றது என கருதலாம். தேசிய தலசீமியா நிலையத்தைச் சேர்ந்த நாம், யூனியன் அஷ்யூரன்ஸ் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் அதிகளவு மகிழ்ச்சியடைகிறோம், எமது இலக்குகளை எய்த இவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக அமைந்துள்ளது' என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக பிரிவின் பிரதி பொது முகாமையாளர் தர்ஷன அமரசிங்க கருத்து தெரிவிக்கையில், 'சிறந்த கூட்டாண்மை குடிமகன்களாக திகழ்வது என்பது யூனியன் அஷ்யூரன்ஸ் கொள்கைக்கு அமைவாக உறுதியான அங்கமாக உள்ளது. அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குவது மற்றும் எமது சமூகத்தின் நலன் தொடர்பில் கவனம் செலுத்துவது என்பது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும். இந்த செயற்பாட்டுக்கு, எமது சமூக பொறுப்புணர்வு செய்திட்டங்களின் மூலமாக நாம் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்' என்றார்.

ஆரேக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவது தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸின் வெளிப்படுத்தப்பட்ட இலக்குகள் என்பது, தமது வாடிக்கையாளர்களுடன் வெளிப்படைத்தன்மை, மதிப்பளித்தல் மற்றும் வசதி ஆகியவற்றின் மூலம் பங்காண்மைகளை ஏற்படுத்துதல் என்பதற்கமைய அமைந்துள்ளது. கம்பனி தொடர்ந்தும் தமது நம்பிக்கை எனும் உறுதி மொழிக்கமைவாக, எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்ப நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்த வண்ணமுள்ளது.