Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு

இலங்கையின் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக உயர் தரத்திலமைந்த சிறந்த சேவைகளை யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கி வருகிறது. இவ்வாறான உயர்ந்த சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கு கம்பனியின் முறையாக பயிற்சிகளை பெற்ற, உற்சாகமான ஊழியர் குழுவினர் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

இதன் காரணமாக, இவ்வாறு சிறப்பாக தமது செயற்பாடுகளை வெளிப்படுத்தும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புகளை வழங்கி, அவர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கி வருகிறது. 2015ஆம் ஆண்டில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த 98 சிறந்த ஊழியர்கள் மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியினரும் ஒவ்வொரு பிராந்தியங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர். மலேசியா, துபாய் அல்லது பிரான்ஸ் நாடுகளுக்கு இவர்கள் விஜயம் செய்யவுள்ளனர். இந்த சுற்றுலாப்பயணங்களின் போது குறித்த நாடுகளில் காணப்படும் பிரதான சுற்றுலாப் பகுதிகளுக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதுடன், வாழ்வில் கிடைக்கும் அரிய சந்தர்ப்பமாகவும் அமைந்திருக்கும். வெவ்வேறு கலாசாரங்கள் மற ;றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெவ்வேறு பகுதிகள் பற்றி அறிந்து கொள்வதற்கு இது ஒரு முக்கியத்துவமான சந்தர்ப்பமாக அமைந்திருக்கும்.

வினைத்திறன் சிறப்புக்கான கௌரவிப்பாக அமைந்துள்ளதுடன், மக்கள் மீதான இந்த முதலீடுகள் மூலமாக தொழில் நிலையத்தில் நிபுணத்துவமான பண்பை மேம்படுத்த உதவியாக அமைந்திருக்கும் என்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த காப்புறுதி கட்டமைப்பை கம்பனியினுள் ஏற்படுத்த முடியும் என கருதுகிறது.

தொழில் புரிவதற்கு சிறந்த இடம் என தெரிவாகியிருந்ததையிட்டு யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமை கொள்வதுடன், கம்பனி முழுவதிலும் பரந்தளவில் பயிலும் மற்றும் ஒன்று திரட்டிய நோக்கத்தை செயற்படுத்தி, நாட்டில் அதிகளவு நாடப்படும் காப்புறுதி தீர்வுகள் வழங்குனராக தன்னை நிலைநிறுத்தும் வகையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை அனுபவம் வாய்ந்த மற்றும் வினைத்திறன் மிக்க நிபுணர்கள் முன்னெடுத்து வருகின்றனர். உறுதியான மூலதன இருப்பு மற்றும் உயர் தரப்படுத்தல்களை கொண்ட சர்வதேச மீள்காப்புறுதி நிறுவனங்களுடனான பங்காண்மைகள் போன்றவற்றையும் கொண்டுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம் 'நம்பிக்கை' எனும் உறுதி மொழிக்கமைவாக வெளிப்படையான, வசதியான மற்றும் கௌரவத்துடனான சேவைகளை தனது பங்காளர்களுக்கு வழங்கி வருகிறது.

FT1: பிரான்ஸ் குழு FT12: துபாய் குழு FT2:மலேசியா குழு