Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

உயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது

இலங்கையர்களின் நம்பிக்கையை வென்ற காப்புறுதி சேவை வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், 9.5 சதவீதத்தை தமது பங்கிலாப வீதமாக அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்காக லைஃவ் அட்வான்டேஜ் திட்டத்துக்காக இந்த பங்கிலாப வீதம் வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்காக உறுதியளிக்கப்பட்ட ஆகக்குறைந்த தொகையான 8 சதவீதம் என்பதை விட இந்தப் பெறுமதி குறிப்பிடத்தக்களவு அதிகமானதாக அமைந்துள்ளது. 2015 இல் சாதாரண வட்டி வீதம் என்பது 5.99 சதவீதமாக பதிவாகியிருந்தது. எனவே ஆகக்குறைந்த தொகையாக அறிவிக்கப்பட்டிருந்த பெறுமதி இந்த சராசரி வட்டி வீதத்தை விட பெருமளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்த தொகையை விட எப்போதும் உயர்ந்த தொகையை வருமானமாக வழங்குவது எனும் நிறுவனத்தின் கொள்கையின் தொடர் அங்கமாக இது அமைந்துள்ளது. தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக காப்புறுதிதாரர்களுக்கு உறுதியளித்த தொகையை விட அதிகமான தொகையை வழங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

'யூனியன் லைஃவ் அட்வான்டேஜ்' காப்புறுதிதாரர்களுக்கு இந்த விசேட பங்கிலாப வீதத்தை அனுபவிக்க முடியும், நிறுவனத்தின் பங்கிலாப அடிப்படையிலான தீர்வுகளில் பிரதிபலிக்கப்படக்கூடிய ஆயுள் நிதியம் என்பதில் பெறப்பட்ட முதலீட்டு வருமானத்தைப் பொறுத்ததாக இந்த காப்புறுதித்திட்டம் அமைந்துள்ளது.ஒவ்வொரு தனிநபருக்கும் பிரத்தியேகமாக பேணப்படும் முதலீட்டுக் கணக்கின் மூலமாக ஒவ்வொரு தனிநபருக்குரிய பங்கிலாபம் வழங்கப்படும்.

நிறுவனத்தின் 'இலாபத்துடனான' காப்புறுதிதாரர்கள் 2015 டிசம்பர் 31ஆம் திகதி செயல் நிலையில் காணப்பட்டிருந்தபட்சத்தில் அவர்களுக்கு இலாபங்கள் அடங்கலாக 2015 ஆம் ஆண்டுக்குரிய போனஸ் கொடுப்பனவு வழங்கப்படும். அவர்களின் காப்புறுதிக்கு இந்த தொகை சேர்க்கப்படும். 2015 இல் 6.9 பில்லியன் ரூபாயை தனது மொத்த தேறிய தவணைக்கட்டண வருமானமாக பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, தனது பெறுமதி வாய்ந்த காப்புறுதிதாரர்களுக்கு உயர்ந்த அனுகூலங்களை பெற்றுக் கொடுக்க நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆயுள் பிரிவின் செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் திருமதி. இரோஷினி தித்தகல கருத்து தெரிவிக்கையில், '2015 இல் நிறுவனத்தின் செயற்பாடுகள் என்பது உயர்வடைந்திருந்தது. 2014 இலிருந்து தனது நிலையை குறிப்பிடத்தக்களவு நிலைபடச் செய்திருந்தது. 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸின் வெளிப்படைத்தன்மை என்பது தொடர்ச்சியாக நேர்த்தியானதாக அமைந்திருந்தது. இந்த ஆண்டின் உறுதியான பெறுமதிகள் மூலமாக சாதனையை நோக்கி பயணிப்பதற்கு எமக்கு காணப்படும் ஈடுபாடு மற்றும் எமது வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை கட்டியெழுப்பி அதற்கு வெகுமதியை சேர்க்க நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பாகவும் அமைந்துள்ளது' என்றார்.

நம்பிக்கை எனும் உறுதி மொழிக்கமைய யூனியன் அஷ்யூரன்ஸ் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. சௌகர்யம், மதிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய வர்த்தக நாமப் பெறுமதிகளை இது உறுதி செய்கிறது. நிலைபேறான வளர்ச்சி என்பது சரியான கொள்கைகள் என்பதன் மூலம் எய்தப்படக்கூடியது என்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. இவற்றின் மூலமாக சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கு சரியான மக்கள் மற்றும் சிறந்த செயற்பாடுகள் போன்றவற்றுக்கு வழிகோலுமாக அமைந்திருக்கும் என கருதப்படுகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட இந்த செயற்பாட்டின் மூலமாக தொடர்ச்சியான வளர்ச்சி கடந்த பல ஆண்டுகளாக எய்தப்பட்டிருந்தன. குறிப்பாக 2015 ஆண்டு இறுதியில் உறுதியான நிதிப் பெறுபேறுகள் பதிவாகியிருந்ததன மூலம் நம்பிக்கையை வென்ற சேவை வழங்குனர் என்பதை மேலும் உறுதி செய்துள்ளது.