Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து

இலங்கையின் காப்புறுதித் துறையில் எப்போதும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி நிறுவனம், தனது யூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ் (Union Single Premium Advantage) காப்புறுதித்திட்டத்தின் மூலம் பல காப்புறுதிதாரர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

பாரம்பரிய முறைகளை விட, அதிகளவு அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் நம்பிக்கைக்குரிய காப்புறுதி திட்டமொன்றில் தமது பணத்தை முதலீடு செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபருக்கும் யூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ் மிகவும் பெறுமதி வாய்ந்த தீர்வாக காணப்படுகிறது.

ஒரு தடவை மாத்திரம் தவணைக் கட்டணம் செலுத்தப பட வேண்டிய காப்புறுதித் திட்டம் என்பதுடன், 5 வருடம் முதல் 30 வருடங்கள் வரையான காலப்பகுதிக்கு பணத்தை முதலீடு செய்யலாம். இதன் போது முதலீட்டாளருக்காக பிரிதொரு முதலீட்டு கணக்கொன்று ஆரம்பிக்கப்படுவதுடன், தவணைக்கட்டணங்கள் மற்றும் வருடாந்த இலாபங்கள் அந்தக் கணக்கில் வைப்புச் செய்யப்படும். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும், அந்த வருடத்துக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட ஆகக்குறைந்த இலாப பெறுமதி வெளிப்படுத்தப்படும். இதன் போது, மற்றுமொரு விசேட அம்சமாக, செலுத்தும் ஒற்றை தவணைக்கட்டணப் பணத்தின் 105 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஆயுள் காப்புறுதியும் வழங்கப்படும்.

யூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ் திட்டத்தினூடாக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு கிடைக்கும் பிரதான அனுகூலமாக, இந்நாட்டில் காணப்படும் மக்களின் நம்பிக்கையை வென்ற, பல தசாப்த கால அனுபவத்தைப் பெற்ற யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி நிறுவனம் எனும் முன்னணி நிறுவனத்தில் தமது பணத்தை முதலீடு செய்வதற்கு வாய்ப்பு கிடைப்பதாகும். எனவே, தமது முதலீட்டின் பாதுகாப்பு பற்றி எவ்வித சந்தேகங்களையும் கொள்ளத் தேவையில்லை. அதுபோலவே, சந்தையில் காணப்படும் பாரம்பரிய திட்டங்களை விட மாறுபட்ட இந்த முதலீடு, எந்தளவு காலத்துக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனும் தீர்மானத்தை மேற்கொள்ளும் சுதந்திரம் முதலீட்டாளரைச் சேரும்.இதற்கு மேலாக, ஆயுள் காப்புறுதியொன்றும் கிடைப்பதன் காரணமாக, தமது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் எந்தவொரு நபருக்கும் யூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ் திட்டம் மிகவும் மனநிம்மதியை வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.

யூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ் திட்டம் பற்றி மேலதிக விவரங்களை அறிந்து கொள்வதற்கு, அருகிலுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் கிளைக்கு விஜயம் செய்யலாம். அல்லது 0112 990 990 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தலாம். அல்லாவிடின் எமது பிரத்தியேக நிதி ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி நிறுவனம் 'நம்பிக்கை| எனும் தனது உறுதி மொழிக்கமைய தமது வாடிக்கையாளர்களுடன் வசதியான முறையிலும், வெளிப்படையாகவும், கௌரவமான முறையிலும் சேவைகளை வழங்கி வருகிறது. எப்போதும், புத்தாக்கமான முறையில், பிரசார மற்றும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை இந்த இலக்கை எய்தும் நோக்கில் முன்னெடுத்து வருகிறது.