Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு

பிரத்தியேகமான ஆயுள் காப்புறு திநிறுவனமாக இயங்க ஆரம்பித்த முதலாவது ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி தேறிய காப்புறுதி வழங்கல்கள் மற்றும் இலாபம் ஆகியவற்றில் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

2015 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த பன்னிரண்டு மாத காலப்பகுதியில் நிறுவனத்தின் மொத்த காப்புறுதி வழங்கல்களின் பெறுமதிரூ. 6.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்த பெறுமதி ரூ. 5.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 17 சதவீதஅதிகரிப்புஎன்பதுகுறிப்பிடத்தக்கது. ஆயுள் தவிர்ந்த காப்புறுதி பிரிவின் 78மூ சதவீதமானபங்குகளை Fairfax ஏசியா நிறுவனத்துக்கு விற்பனை செய்தமை மூலம் பெறப்பட்ட வருமானம் உள்ளடங்கலாக வரிக்கு பிந்திய இலாபம் 2.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. ஒதுக்கப்பட வேண்டிய வருமானம் தவிர்ந்த வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 1125 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதி 2014 இல் 881 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.

2015 டிசம்பர் 31ஆம் திகதிஉள்ளவாறான யூனியன் அஷ்யூரன்ஸின் ஆயுள் காப்புறுதி நிதியத்தின் பெறுமதி 26 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இந்த ஆரோக்கியமான நிதி ஒதுக்கப் பெறுமதி,கம்பனி வியாபாரத்தின் நிதி உறுதித் தன்மையை வெளிப்படுத் 2015 ஆம் ஆண்டு என்பது யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு மிகவும் சிறந்த ஆண்டாக அமைந்திருந்தது. நிறுவனத்தின் வரலாற்றில் பதிவாகிய மிகவும் உறுதியான பெறுபேறுகள் கடந்த ஆண்டு பதிவாகியிருந்தது. நிறுவனம் கடந்த ஆண்டில் சிறந்த வருமானத்தை பெற்றிருந்தமை மட்டு மின்றி, சிறந்த மேலாண்மை செயற்பாடுகள், பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்காக இலங்கை பட்டய கணக்காளர்கள் கல்வியகம் (ICASL) மற்றும் தெற்காசிய கணக்காளர் சம்மேளனம் (SAFA) பல விருதுகளை தனதாக்கியிருந்தது.

தேசிய வர்த்தகச் சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது,காப்புறுதித் துறையில் யூனியன் அஷ்யூரன்ஸின் சிறப்பானசெயற்பாடுகள் மற்றும் கூட்டாண்மை மேலாண்மை செயற்பாடுகள் போன்றவற்றுக்காகவும் கௌரவிக்கப்பட்டிருந்தது.

மேலும்,அண்மையில் நடைபெற்ற ACCA விருதுகள் வழங்கும் நிகழ்வில் நிதிச் சேவைகள் மற்றும் காப்புறுதிபிரிவில் வெற்றியாளராக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவுசெய்யப்பட்டிருந்தது

Great Place to Work கல்வியகத்தின் மூலமாகயூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த மனித முகாமைத்துவ செயற்பாடுகள் கௌரவிக்கப்பட்டிருந்தன. அத்துடன் SLITD இனால் முன்னெடுக்கப்பட்டிருந்தவிருதுகள் வழங்கும் நிகழ்வில் மனித அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான தங்கவிருதையும் தனதாக்கியிருந்தது

நிறுவனத்தின் ஊழியர்களின் நலன் கருதிஅறிமுகம் செய்யப்பட்டிருந்த e-learning கட்டமைப்புக்காக Celent இனால் யூனியன் அஷ்யூரன்ஸ் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“நம்பிக்கை”எனும் தனதுவர்த்தக நாம உறுதிமொழியை பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு புத்தாக்கமான வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கம்பனி திட்டமிட்டுள்ளது. தனது சகல பங்காளர்களுடனும் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களின் போது,வசதியான,வெளிப்படையான மற்றும் கௌரவத்துடனான பிணைப்புகளை பேண யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது.