Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு

கடந்தமாதத்தின் முற்பகுதியில் ஸ்டிங் கூட்டாண்மைபொறுப்பாண்மை சுட்டி என்பது இலங்கையின் முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களை கௌரவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இதன் மூலம் குறித்த நிறுவனங்களின் அறிக்கையிடல் மற்றும் செயற்பாடுகள் ஆகிய பிரிவுகளில் பொறுப்பாண்மையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை உறுதி செய்திருந்தது.

ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மைச் சுட்டி, இலங்கையின் மாபெரும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து தன்னார் அடிப்படையில் சுட்டியில் பட்டியலிடப்படுவதற்கு விண்ணப்பங்களை கோரியிருந்தது. இந்தஆண்டு 20 தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு மேலதிகமாக,பொதுவாக காணப்படும் வருடாந்த நிதிக் கணக்கறிக்கைகள்,நிலை பேறான செயற்பாடுகளுக்குரிய அறிக்கைகள் மற்றும் கூட்டாண்மை இணையத்தளங்கள் தொடர்பான தகவல்கள் பற்றிய விடயங்களையும் கவனத்தில் கொண்டிருந்தது.

ஓவ்வொரு வருடமும், 6 பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அளவீடுகள் மற்றும் வெளிப்படுத்தல்கள் - கம்பனி தனது செயற்பாடுகளை பிரதானநிலை பேறான குறிகாட்டிகள் அடிப்படையில் மதிப்பீடு செய்திருந்தமை,கொள்கை வலையமைப்பு - சூழல் செயற்பாடுகள், ஊழியர்கள், மனிதவளங்கள் மற்றும் சமூக பிரச்சினைகள் ஆகியவற்றை கையாள்வதற்கு நிறுவனம் கொண்டுள்ள கொள்கைகளைஆராய்வது,பங்காளர் ஈடுபாடு–நிறுவனத்தின் பிரதான பங்காளர்கள் பற்றிய கம்பனியின் விழிப்புணர்வை மதிப்பிடுவது மற்றும் கம்பனியின் வியாபார ஈடுபாட்டின் தன்மைஆகியவற்றை மதிப்பிடுவது,தாக்கங்கள், இடர்கள் மற்றும் வாய்ப்புகளை இனங்காண்பது–நிறுவனத்தின் செயற்பாடுகள் காரணமாக ஏற்படுத்தப்பட்ட சூழல்,பொருளாதார மற்றும் சமூக நிலைபேறு குறித்த விழிப்புணர்வுகளை மதிப்பிடல், முகாமைத்துவம் மற்றும் மேலாண்மை–சர்வதேசரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முகாமைத்துவ கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதன் மூலமாக சூழல்,சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு,தரம் மற்றும் தொழில் நிலையசெயற்பாடுகள் போன்றன எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை இனங்கண்டுகொள்ளல் மற்றும் கூட்டாண்மை பெறுமதிகள் - சமூகத்தில் நிறுவனம் பங்காற்ற விரும்பும் நிலைக்கமைய,உயர் மட்டபெறுமதிகள் மற்றும் கொள்கைகளைகம்பனி ஸ்தாபிக்கமுன்வந்துள்ளமை.

புள்ளிகள் அடிப்படையில்,கூட்டாண்மை குடிமகன் என்பது நான்கு தரப்படுத்தல்களில் ஒன்றாக அமைந்துள்ளது–ப்ளாட்டினம் (75 – 100),தங்கம் (60 – 74.9),வெள்ளி (50-59.9) மற்றும் வெண்கலம் (40 – 49.9) என்பனஅவையாகும்.

ஆச்சரிய மூட்டும் வகையில்,யூனியன் அஷ்யூரன்ஸ் வெள்ளிதரப்படுத்தலை 57 புள்ளிகளுடன் பெற்றிருந்தது. இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட முதல் 25 நிறுவனங்களினுள் தெரிவாகியிருந்த ஒரே காப்புறுதி நிறுவனம் எனும் பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அண்மைக் காலங்களில் கம்பனி சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது, இதன் மூலமாக பொறுப்பாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை சகல கொடுக்கல் வாங்கல்களிலும் பதிவுசெய்திருந்தது. நம்பிக்கை மற்றும் பொறுப்பாண்மை ஆகியவற்றில் இலங்கையின் காப்புறுதித்துறையில் உயர் மட்டத்தை பேணி வருகிறது.

நாட்டின் நம்பிக்கையை வென்ற காப்புறுதி நிறுவனம் எனும் வகையில்,உறுதியான மற்றும் தொடர்ச்சியான செயற்பாடுகளை 28 வருட காலமாக முன்னெடுத்து வருகிறது. 140 க்கும் அதிகமான பகுதிகளில், 4500க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் கள ஊழியர்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த சுமார் 220000 பேருக்கு தனது சேவைகளை வழங்கியுள்ளது. 'நம்பிக்கை எனும் உறுதிமொழிக்கமைய நிறுவனம் தொடர்ச்சியாக தனது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், சகல பங்காளர்களுக்கும் சௌகர்யம், வெளிப்படைத்தன்மை மற்றும் மதிப்பு ஆகியவற்றை சகலகொடுக்கல் வாங்கல்களிலும் வழங்குவதையூனியன் அஷ்யூரன்ஸ் உறுதிசெய்கிறது.